Thottam Konda Rasave

Thottam Konda Rasave Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா



தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி

காட்டுக் குயில் போல்
பாட்டு படிச்சோம்
கங்கையம்மன் காவல் இருப்பா
பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா ஹோய்

தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி

மேட்டை விட்டு காட்டு வெள்ளம்
கீழிறங்கி வந்ததே
தோட்டமும் விளங்குதே

வீட்டை கட்டி வேலி கட்டி
வாழவெச்ச சாமியே
காலமும் கனிஞ்சுது

கட்டிவெல்லம் போல
ராணியைப் பாருங்க
கட்டெறும்பு போல
ராசாவைக் கேளுங்க

சிட்டுச் செல்லம்மா
ஆம்பளப்புள்ள ஒண்ணு
பெத்து கொடும்மா

பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா ஹோய்

தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி

பூத்த மல்லி காத்தடிச்சு
பொண்ணுருவம் ஆச்சுது
கண்ணு ரெண்டும் பேசுது

காத்திருந்த வண்டு ஒண்ணு
காள வடிவாச்சுது
மேலே வந்து கேக்குது


பொட்டு வச்ச பார்த்தா
தாமரைப்பூவே
பூ முடிச்சுப் பார்த்தா
அம்மனைப் போல

கட்டித் தங்கமே
தோட்டத்து மாம்பழம்
உன்னை வெல்லுமா

பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா ஹோய்

தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி



கண்டெடுத்த ரத்தினத்தை
மண்புடிச்சு வையுங்க
கையில் அள்ளிக் கொள்ளுங்க

கண்ணுபடப் போகுதையா
பொண்ணு கிட்டச் சொல்லுங்க
கன்னப் பொட்டு வையுங்க

நல்லதொரு காலம்
அலையில ஆடுங்க
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
உறவில வாழுங்க
எங்க துரையே
வாழுங்க வாழுங்க
ரொம்ப ரொம்ப நாள்

பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடாஹோய்

தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி

காட்டுக் குயில் போல்
பாட்டு படிச்சோம்
கங்கையம்மன் காவல் இருப்பா
பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா
பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா ஹோய்