Thuliyo Thuli

Thuliyo Thuli Song Lyrics In English


ஓஒஓஒஓஓஒ
ஓஒஓஒஓஓஒ
ஓஒஓஒஓஓஒ

துளியோ துளிஈ

துளியோ துளி முத்துத்துளி
கிளியோ கிளி தங்கக்கிளி
பனியோ பனி வெள்ளிப்பனி
கனியோ கனி வண்ணக்கனி

எல்லாம் ஒரு பெண்ணானது
பெண்ணாகியே பண்பாடுது
நீர் மேகம் ஊர் சுற்றும்
ஏற்காட்டிலே
நாணல்கள் பூத்தாடும்
தேன் பாட்டிலே

நீர் மேகம் ஊர் சுற்றும்
ஏற்காட்டிலே
நாணல்கள் பூத்தாடும்
தேன் பாட்டிலே

துளியோ துளி முத்துத்துளி
கிளியோ கிளி தங்கக்கிளி

சலசலத்து சென்றிடும்
நதி அழகு
நெளிந்து வரும் சிற்றிடை
நடை அழகு
கலகலத்து பொங்கிடும்
அலை அழகு
குலுங்கி வரும் கைவளை
இசை அழகு

கொத்திடும் அலகுகளால்
கொஞ்சிடும் பறவைகளும்
நித்தமும் அரும்பு விட்டு
நின்றிடும் பூ மரம்

எண்ணிட பல கதைகள்
சொல்லிடும் உயிர் தோழி
சொன்னதும் இள மனதில்
வந்திடும் சுகம் கோடி
பூங்கூட்டம் பாராட்டும்
பூங்காற்று நான்

துளியோ துளி முத்துத்துளி
கிளியோ கிளி தங்கக்கிளி


எல்லாம் ஒரு பெண்ணானது
பெண்ணாகியே பண்பாடுது
நீர் மேகம் ஊர் சுற்றும்
ஏற்காட்டிலே
நாணல்கள் பூத்தாடும்
தேன் பாட்டிலே

இயற்கை அன்னை
கொஞ்சிடும் இளைய மகள்
எனது மனம் வெண்ணிற
வசந்த முல்லை

இரவு பகல் சிந்துகள்
இசைத்த படி
உலவுகின்றேன் சஞ்சலம்
எதுவும் இல்லை

எண் திசை முழுவதிலும்
என் குரல் பவனி வரும்
மெல்லிசை இனிமையிலே
மயங்கிடும் மனித குலம்

மங்கையின் வழி மறைக்க
இங்கொரு தடை ஏது
நில் என எனை தடுத்து
சொல்பவர் கிடையாது
காவல்கள் இல்லாத
காட்டாறு நான்

துளியோ துளி முத்துத்துளி
கிளியோ கிளி தங்கக்கிளி

எல்லாம் ஒரு பெண்ணானது
பெண்ணாகியே பண்பாடுது
நீர் மேகம் ஊர் சுற்றும்
ஏற்காட்டிலே
நாணல்கள் பூத்தாடும்
தேன் பாட்டிலே

நீர் மேகம் ஊர் சுற்றும்
ஏற்காட்டிலே
நாணல்கள் பூத்தாடும்
தேன் பாட்டிலே

துளியோ துளி முத்துத்துளி
கிளியோ கிளி தங்கக்கிளி
பனியோ பனி வெள்ளிப்பனி
கனியோ கனி வண்ணக்கனி