Thulli Vara Poren

Thulli Vara Poren Song Lyrics In English


துள்ளி வரப் போறேன்
ஏஏஏஏஹ்ஏ
சுருள் சுருளாஆஅஆ
பாட்டுகளை அள்ளி விடப் போறேன்ஏஏஏ
அய்யா எஞ்சாமிகளே
இந்தப் திரையைக் கொஞ்சம் தூக்கிடுங்கோ
ஓஒஓஒஓ

ஹேஏ

இருவர் : நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு
நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு

ஓங்கி வளரும் கலையைத் தலையிலே
தாங்கி வளரும் திருநாடு
தாங்கி வளரும் திருநாடு

இருவர் : நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு

சொந்த கழுகு போலே
இன்பம் கருகல் வர
கொம்பை வளைத்து கொண்டு தொங்குமே

அதை கொத்த பறவை
வந்து தங்குமேஏஏஆஅஆஅஆ

சொந்த கழுகு போலே
இன்பம் கருகல் வர
கொம்பை வளைத்து கொண்டு தொங்குமே

அதை கொத்த பறவை
வந்து தங்குமே

உயர் பண்பு பரம்பரையில்
அன்பும் அறனும் சேர்ந்து
பசுமையாகி வளம் பொங்குமே

இருவர் : தென்றல் பெருமை பாடிவரும் எங்குமே
குல பெருமை பாடிவரும் எங்குமே

இருவர் : நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு

மதுரத் தமிழ் வழிந்து
உதிரத்தொடு கலந்து
மனதில் துணிவுகொண்டு வாழ்ந்தவர்
சக்தி வளரக்கலை பயின்று தேர்ந்தவர்

மதுரத் தமிழ் வழிந்து
உதிரத்தோடு கலந்து
மனதில் துணிவுகொண்டு வாழ்ந்தவர்
சக்தி வளரக்கலை பயின்று தேர்ந்தவர்


அன்று எதிரிப்படை யெழுந்து
பதறி மிகச் சினந்து
இமயச் சரிவில் வந்த போதிலே
வெற்றி எமக்கென்றே முழங்கிற்று காதிலே
வெற்றி எமக்கென்றே முழங்கிற்று காதிலே

இருவர் : நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு
நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு

இருவர் : மலையாளம் புகழ்வெகு நீளம்
எங்கள் மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்

அலையாடும் கடல் விளையாடும்
அலையாடும் கடல் விளையாடும்
அக்கம் பக்கம் கொக்குகளும்
வட்டமிட்டுப் பறக்கும்

இருவர் : மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்

பாக்குமரத்திலே பாளை சிரிக்கும்
பச்சை பட்டாடைபோல் கதலி இலை விரிக்கும்
உவ்வா
பாக்குமரத்திலே பாளை சிரிக்கும்
பச்சை பட்டாடைபோல் கதலி இலை விரிக்கும்

தேக்கு மரங்கள் விண்ணை இடிக்கும்ம்ம்ம்
இடிக்கும் இடிக்கும் இடிக்கும்
தேக்கு மரங்கள் விண்ணை இடிக்கும்
இன்னும் சித்திரைச் சோலையெல்லாம் கண்ணைப்பறிக்கும்

இருவர் : மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்

அழகுக் குயில்கள் வந்து பாடிக்கிடும்
தென்னையை மிளகுக்கொடி படர்ந்து மூடிக்கிடும்
அழகுக் குயில்கள் வந்து பாடிக்கிடும்
தென்னையை மிளகுக்கொடி படர்ந்து மூடிக்கிடும்

சிலுசிலுக்கும் அருவி ஓடிக்கிடும்
சிலுசிலுக்கும் அருவி ஓடிக்கிடும்
மயில் சிறகை விரிச்சிகிட்டு ஆடிக்கிடும்

தேனிருக்கும் பூவிருக்கும்
மானிருக்கும் வனமிருக்கும்
தேனிருக்கும்
பூவிருக்கும்
மானிருக்கும்
வனமிருக்கும்
இருவர் : செங்கனிகளுமிருக்கும்
தின்றால் மிகு
இனிக்கும்

இருவர் : மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்
மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்