Ulagam Ariyatha Puthumai

Ulagam Ariyatha Puthumai Song Lyrics In English


உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை

அலை கடல் மேவும் துரும்பதைப் போலே
யானை வாயின் கரும்பதைப் போலே

அலை கடல் மேவும் துரும்பதைப் போலே
யானை வாயின் கரும்பதைப் போலே
நிலையும் இழந்தேனே வினையும் அதனாலே
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை

கேளுமைய்யா விலை கேளுமய்யா
வாழப் பிறந்தோர் நிலை பாருமய்யா
கேளுமைய்யா விலை கேளுமய்யா
வாழப் பிறந்தோர் நிலை பாருமய்யா

தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே
பெண் மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ


தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே
பெண் மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ
அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே
அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே
அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே
அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே
இந்த அனுபவம் வாழ்வில் நேர்ந்ததினாலே
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை

என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை

கேளுமையா விலை கேளுமையா
விலை கேளுமையா