Ulagam En Ulagam

Ulagam En Ulagam Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி

உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்

உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்

நான் புரவியில் ஏறி
வருகிற வழியில்
ஆயிரம் அருவிகள் சிரித்திடுமே
என் புன்னகை என்னும்
திறவியினாலே
பூட்டிய கோட்டைகள் திறந்திடுமே

உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்

உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்

தமிழ் மணம் வீசும் காற்றினிலே
அறிவும் அழகும் பொங்கிடுமே
தமிழைப் பேசும் நாவினிலே
இனிமைதானே தங்கிடுமே

வள்ளுவன் குறளும்
அவ்வையின் குரலும்
பாதை வகுத்திடும்போது
வானம் விழுந்தினும்
தடைகள் எழுந்தினும்
மனதினில் அச்சம் ஏது?


உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்

உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்

வீரம் எனது ஆடையில்லை
உதிரம் என்றே சொல்வேனே
மானம் எந்தன் கவசமில்லை
உயிராய் சுமந்தே செல்வேனே

ஒவ்வொரு நொடியும்
வைரம் என்றால்
காலம் புதையல்தானே
ஒவ்வொரு உள்ளமும்
அரியணை என்றால்
நிரந்தர அரசன் நானே

உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்

உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்