Un Azhagai Vadippatharku

Un Azhagai Vadippatharku Song Lyrics In English


உன் அழகை வடிப்பதற்கு உருவெடுத்தேன் தாயே உன் அழகை வடிப்பதற்கு உருவெடுத்தேன் தாயே அதை என் விழியில் தென்படாமல் மறைத்து வைத்தாய் நீயே

சங்கரனும் பாடி வைத்தான் சௌந்தர்யலஹரிஈ சங்கரனும் பாடி வைத்தான் சௌந்தர்யலஹரி அந்த சௌந்தர்ய தேவதைக்கு கன்யாகுமரி

உன் அழகை வடிப்பதற்கு உருவெடுத்தேன் தாயே

ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனில்லை உன் அந்தரங்கம் என்னவென்று புரிந்தவனில்லை ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனில்லை உன் அந்தரங்கம் என்னவென்று புரிந்தவனில்லை

அழகு என்னும் சாகரத்தில் கடைந்தெடுத்த அமுதம் அதில் ஒரு துளிதான் உலகறியும் ஒளித்து வைத்தாய் முழுதும்

உன் அழகை வடிப்பதற்கு உருவெடுத்தேன் தாயே


வார்க்குழலின் கருமை நிறம் கார்முகில் காட்டஆ வார்க்குழலின் கருமை நிறம் கார்முகில் காட்ட உன் வாய் இதழின் இளஞ்சிவப்பை வான் கதிர்தான் தீட்ட

வார்க்குழலின் கருமை நிறம் கார்முகில் காட்ட உன் வாய் இதழின் இளஞ்சிவப்பை வான் கதிர்தான் தீட்ட

விழி மலரின் வெண்மை நிறம் குளிர் நிலவில் விளங்கஆஆஆ விழி மலரின் வெண்மை நிறம் குளிர் நிலவில் விளங்க உன் குரல் படைத்த மென்மையெல்லாம் பூவினத்தில் குலுங்க

உன் அழகை வடிப்பதற்கு உருவெடுத்தேன் தாயே