Un Vellandhiyu Azhagu Dhaan

Un Vellandhiyu Azhagu Dhaan Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பாடல் ஆசிரியர் : சாவி



உன் வெள்ளந்தியும் அழகு தான் கள்ளந்தியும் அழகு தான் தெத்துப்பல்லு அழகு தான் வெட்க பார்வ அழகு தான் நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான்

உன் வெள்ளந்தியும் அழகு தான் கள்ளந்தியும் அழகு தான் தெத்துப்பல்லு அழகு தான் வெட்க பார்வ அழகு தான் நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான்

உன் ஓர பார்வ பார்த்து என் மனச நானும் தொலச்சேன் உன் குறும்பு பேச்சு குள்ள என் காதல் கண்டு பிடிச்சேன்



கனவா வந்த நெசமா எனக்குள் நீயும் மொளச்ச ஏய் நெசந்தான் இது நெசந்தான் என் மனசில் உன்ன சொமப்பேன்

உனக்காக வாழ்கின்ற வாழ்விங்கு போதும் உன்னாலே புதுசொர்க்கம் நான் காண வேண்டும்

காணாத பேர் இன்பம் நாம் காண வேண்டும் ஆகாய மேகங்கள் நாம் ஆக வேண்டும்

உயிரே என் உயிரே என் உறவாகவே வானும் இம்மண்ணும் இனி நாமாகவே


அழகே என் அழகே நீ கடல் போலவே அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே

இசை :

சுகமா இது வலியா இந்த காதல் பெருந்தவிப்பா சுகந்தான் இது சுகந்தான் உன் உயிரில் வந்து கலந்தேன்

கிளைமேவும் கொடியாகி உன் மீது படர்வேன் இலைதேடும் ஒலியாகி நான் உன்னை தொடர்வேன்

தீராத வாழ்விங்கு நாம் வாழ வேண்டும் நீங்காமல் காலத்தை நாமாள வேண்டும்

தீயே என் தீயே எனை நீராக்கவா தீதும் நன்றும் இனி நீ ஆகவே

சிறகே வெண்சிறகே நீ பிரியாதிரு பிரிந்தால் உயிர் துறப்பேன் இது நிஜமானதே

உன் வெள்ளந்தியும் அழகு தான் கள்ளந்தியும் அழகு தான் தெத்துப்பல்லு அழகு தான் வெட்க பார்வ அழகு தான் நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான்

உன் ஓர பார்வ பார்த்து என் மனச நானும் தொலச்சேன் உன் குறும்பு பேச்சு குள்ள என் காதல் கண்டு பிடிச்சேன்

உயிரே என் உயிரே என் உறவாகவே அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே