Unakkaagave

Unakkaagave Song Lyrics In English

இசை அமைப்பாளர்  : ராதன்

சிறுமேக கூடு திறக்கும் உனக்காகவே துளி தீண்ட காடு பிறக்கும் உனக்காகவே

பேரழியது கார் நிழலினை ஓர் நிலையிலும் நீக்க கேட்கவில்லை பார் எதிரிலே பார் அழைக்குது நீ வெறுத்திடும் நீயும் இன்றில்லை

வேர் அழுதிடும் சேர் சகதியாய் தாமரை அது நீக்க கேட்கவில்லை வாழ் என உனை வாழ்வழைக்குது நீ நினைதிட நீளும் உன் எல்லை

ஓர் விரல் ஓர் குரல் தோன்றிட தோன்றலாம் நாளை நாம் பாதையில் மாற்றங்கள் காணலாம்

சிறுமேக கூடு திறக்கும் உனக்காகவே துளி தீண்ட காடு பிறக்கும் உனக்காகவே

உன்னை தொடு மன்னித்திடு காயங்களும் ஆறலாம் உன்னை தொடு நீ அணைத்திடு மனதின் மணமும் பூவில் எழலாம்

தாழ்வென்ன தாழ்விது தாழ் நீக்கி மீண்டெழு வாழ்வென்ன வாழ்விது நீயின்றி ஏதிது

காலங்களும் குடையாகுதே புழு ஒன்று போகும் பாதையில் பேர் அன்பிலே தீரா நதி உனக்காகவே

பேரழியது கார் நிழலினை ஓர் நிலையிலும் நீக்க கேட்கவில்லை பார் எதிரிலே பார் அழைக்குது நீ வெறுத்திடும் நீயும் இன்றில்லை

வேர் அழுதிடும் சேர் சகதியாய் தாமரை அது நீக்க கேட்கவில்லை வாழ் என உனை வாழ்வழைக்குது நீ நினைதிட நீளும் உன் எல்லை

கர்நாடிக் :

ஓஓ ஓஓ

கர்நாடிக் :

உனக்காகவேஉனக்காகவே