Unakkena Thaanae

Unakkena Thaanae Song Lyrics In English


உனக்கெனதானே இந்நேரமா
நானும் காத்திருந்தேன்
ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நிலவிருக்கு
உனக்கென தானே இந்நேரமா
நானும் காத்திருந்தேன்
ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நிலவிருக்கு

இங்கே நாம இரண்டா இல்ல
எந்த கதவு தெறக்காம என்ன
என்னும் போது தேடும் நெஞ்சம்
எடுத்து போகவே

பிரிச்சாலும் பிரியாதம்மா
மறச்சாலும் குறையாதம்மா
கதவுதான் தடுக்குது
தெளிவாகும்மா

உனக்கென்னதானே இந்நேரமா

வீனா பொழுது போகுது இங்கே
விரிச்சா பாயும் தூங்குது அங்கே
உன்ன எண்ணி பெருங்குது மோகம்
ரொம்ப விவரமா

நடுசாமம் நாமும் தனி
நெடு நேரம் வாசம் தனி
பொழுதது விடிஞ்சதா கதவோரமா

உனக்கென்னதானே இந்நேரமா

தேவாரம் தோட்டம் வழி
தேனிகின்னு போற வண்டி
போடி நீயும் போகனும்னா
ரோடு ரொம்ப மோசம்மடா
ரோடு ரொம்ப மோசம்மடா

ஓய் வந்த பாதைய மாத்தாதீங்கடா
அப்படியே ஓட்டுங்கடா டேய்


ஒடம்புவலி தெரியாம ஓடுங்கடா காளைகளா
பத்திரமா கொண்டு போனா
பருத்திக் கொட்ட வாங்கி தாரேன்

பருத்திக் கொட்ட வாங்கி தாரேன்

அய்யனாரு சாத்தும் நம்ம
ஆத்தா மாறி கொடுப்பால் நம்ம
பயம் உனக்கு வேணாம் கண்ணு
கொஞ்சம் பொருத்திரு

நீ இருக்க பயமா என்ன
நிலவிருக்க இருளா என்ன
எனக்கு நீ உனக்கு நான் தோனதானையா

உனக்கெனதானே இந்நேரமா
நானும் காத்திருந்தேன்

ரகசியம் பேச மனசிருக்கு
ராத்திரி நேரம் நிலவிருக்கு

உனக்கெனதானே இந்நேரமா