Unnai Naan Serndhirukka |
---|
ஹா உன்னை நான் சேர்ந்திருக்க
ஹா மாலை தன்னை கோர்க்கவா
சாங்கு சச்சா
கன்னி எந்தன் கை பிடிக்க
ஹா கால நேரம் பார்க்கவா
சாங்கு சச்சா
ஆனந்தப் பொன்னூஞ்சல் அல்லோ
சாங்கு சச்சா
அம்மம்மா ஆரம்பம் அல்லோ
சாங்கு சச்சா
நெஞ்சத்தில் நெஞ்சத்தில் ராஜ ராஜனே
நீங்காமல் நின்றாடும் ராஜ ராஜனே
ஹாஉன்னை நான் சேர்ந்திருக்க
ஹா மாலை தன்னை கோர்க்கவா
சாங்கு சச்சா
கன்னி எந்தன் கை பிடிக்க
ஹா கால நேரம் பார்க்கவா
சாங்கு சச்சா
வில் அம்பு ஏன் வஞ்சியே வஞ்சியே
விழி அம்பு ஏன் வஞ்சியே வஞ்சியே
உள் அன்புதான் மிஞ்சியே மிஞ்சியே
உறவாட வா கொஞ்சியே கொஞ்சியே
சொர்க்க வாசலில் தென்றல் வீசுதோ
பட்டுத் தோகையை தொட்டுப் பேசுதோ
கல்யாண ஊர்கோல நன்நாளிலே
பூ மாரி தூவாதோ பொன் வானமே
ஹோ என்னை நீ சேர்ந்திருக்க
ஹா உத்தரவு தேவையா
சாங்கு சச்சா
கன்னி வந்து கைப் பிடிக்க
ஹா கட்டளைகள் தேவையா
சாங்கு சச்சா
ஆனந்தப் பொன்னூஞ்சல் அல்லோ
சாங்கு சச்சா
அம்மம்மா ஆரம்பம் அல்லோ
சாங்கு சச்சா
நெஞ்சத்தில் நெஞ்சத்தில் வாழும் ராணியே
நீங்காமல் பாடும் சங்கீத வாணியே
முத்து மணி தீப முத்தாடுதே
தத்தும் குயில் பாட்டு பித்தாக்குதே
வானத்து மீன் அள்ளியே அள்ளியே
பூமிக்கு வா வள்ளியே வள்ளியே
நெஞ்சக் கோவிலில் சிற்பமாகவா
சிற்பம் பாடுமா தொட்டுப் பேசுமா
கல்யாண ஊர்கோல நன்நாளிலே
பூ மாரி தூவாதோ பொன் வானமே
ஹா உன்னை நான் சேர்ந்திருக்க
ஹா மாலை தன்னை கோர்க்கவா
சாங்கு சச்சா
கன்னி எந்தன் கை பிடிக்க
ஹா கால நேரம் பார்க்கவா
சாங்கு சச்சா
ஆனந்தப் பொன்னூஞ்சல் அல்லோ
சாங்கு சச்சா
அம்மம்மா ஆரம்பம் அல்லோ
சாங்கு சச்சா
நெஞ்சத்தில் நெஞ்சத்தில் ராஜ ராஜனே
நீங்காமல் நின்றாடும் ராஜ ராஜனே
என்னை நீ சேர்ந்திருக்க
ஹா உத்தரவு தேவையா
சாங்கு சச்சா
கன்னி வந்து கைப் பிடிக்க
ஹா கட்டளைகள் தேவையா