Unnai Padatha |
---|
உன்னைப் பாடாத
நாவும் ஒரு நாவும் அல்ல
அதைக் கேளாத
நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல
உன்னைப் பாடாத
நாவும் ஒரு நாவும் அல்ல
அதைக் கேளாத
நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல
உன்னைப் பாடாத
நாவும் ஒரு நாவும் அல்ல
அதைக் கேளாத
நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல
என் தேவியே என் ஆவியே
எந்நேரமும் உன் வேள்வியே
சங்கீத தேவதையே
நீ இன்றி நான் இல்லையே
உன்னைப் பாடாத
நாவும் ஒரு நாவும் அல்ல
அதைக் கேளாத
நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல
பூங்குயில் பாட்டிசைக்க
யார் சொல்லித் தந்தது
வான் மயில் நாட்டியங்கள்
யார் சொல்லி வந்தது
யாவையும் வான் இருக்கும்
ஓர் தெய்வம் தந்தது
வான் உரை தெய்வம் என்று
நான் உனைக் கண்டது
ஏழையின் நாவில் ஏழிசை கானம்
வாழ்ந்திட நாளும் பூரண ஞானம்
நான் பெறத் தந்தாய் நாயகியே
நான் பெறத் தந்தாய் நாயகியே
என் தேவியே என் ஆவியே
சங்கீத தேவதையே
நீ இன்றி நான் இல்லையே
உன்னைப் பாடாத
நாவும் ஒரு நாவும் அல்ல
அதைக் கேளாத
நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல
ஓடையின் உள் இருந்து
நீர் பொங்கும் ஊற்றிலும்
ஊற்றதன் மேல் நடக்கும்
பூந்தென்றல் காற்றிலும்
காற்றுடன் கை அணைத்து
கூத்தாடும் பூவிலும்
நாற்றிசை ஊர் முழுக்க
நான் காணும் யாவிலும்
தோன்றிடக் கண்டேன் தேவியின் ரூபம்
ஏழையின் நெஞ்சில் ஏற்றிய தீபம்
நான் தினம் பாடும் கீர்த்தனமே
நான் தினம் பாடும் கீர்த்தனமே
என் தேவியே என் ஆவியே
சங்கீத தேவதையே
நீ இன்றி நான் இல்லையே
உன்னைப் பாடாத
நாவும் ஒரு நாவும் அல்ல
அதைக் கேளாத
நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல
என் தேவியே என் ஆவியே
எந்நேரமும் உன் வேள்வியே
சங்கீத தேவதையே
நீ இன்றி நான் இல்லையே
உன்னைப் பாடாத
நாவும் ஒரு நாவும் அல்ல
அதைக் கேளாத
நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல