Unnai Yen Sandhithen

Unnai Yen Sandhithen Song Lyrics In English


உன்னை ஏன் சந்தித்தேன்
ஊமை நான் சிந்தித்தேன்
உன்னை ஏன் சந்தித்தேன்
ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா
நானாக நான் மாறவா இல்லை
வேறாக நான் மாறவா

உன்னை ஏன் சந்தித்தேன்
ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா

தெய்வங்கள் பார்க்காதது
என் துன்பம்
சீதாவும் காணாதது
என் ராமன் யார் என்றுதான்
இப்போது என் ஜீவன் மன்றாடுது

இல்லாத தாலி உண்டானது
இப்போது தாலி ரெண்டானது
என் வாழ்க்கை தள்ளாடுது பின்னென்ன
என் சேலை முள்ளானது

உன்னை ஏன் சந்தித்தேன்
ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா
நானாக நான் மாறவா இல்லை
வேறாக நான் மாறவா

உன்னை ஏன் சந்தித்தேன்
ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா


உயிரான கண்ணாளனா
பின்னாளில் உறவான மணவாளனா
இரு தேரில் ஒரு தேகமா
பெண் வாழ்வில்
இது என்ன புது வேதமா

ஒரு கண்ணை மூடி நான் தூங்கவோ
எது நீதி என்று யார் சொல்வதோ
அன்பென்ன பொய்யாகுமோ உப்புக்கல்
அழுதாலும் தேனாகுமோ

உன்னை ஏன் சந்தித்தேன்
ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா
நானாக நான் மாறவா இல்லை
வேறாக நான் மாறவா

உன்னை ஏன் சந்தித்தேன்
ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா