Uppuma Kindi Vaiyadi

Uppuma Kindi Vaiyadi Song Lyrics In English


பாடலாசிரியர் : தஞ்சை வாணன்

உப்புமா கிண்டி வையடி அடியே உப்புமா கிண்டி வையடி உப்புமா கிண்டி வையடி அடியே உப்புமா கிண்டி வையடி தடி குப்பம்மா மவளே தப்பேதும் இல்லாம உப்புமா கிண்டி வையடி அடியே உப்புமா கிண்டி வையடி

பக்குவம் என்ன சொல்லுடா அடே பக்குவம் என்ன சொல்லுடா பக்குவம் என்ன சொல்லுடா அடே பக்குவம் என்ன சொல்லுடா

அடேய் மக்குப் பையன் மவனே பக்கம் வந்து நிக்காம பக்குவம் என்ன சொல்லுடா அடே பக்குவம் என்ன சொல்லுடா

கண்ணே என் கண்மணியே பொன்னே என் பூங்குயிலே சொன்னேனே தேன் மொழியே அடி சமையக்கட்டு பெருச்சாளியே

கண்ணே என் கண்மணியே பொன்னே என் பூங்குயிலே சொன்னேனே தேன் மொழியே அடி சமையக்கட்டு பெருச்சாளியே

ஆஹ் உப்புமா கிண்டி வையடி சீச்சீச்சீ கிண்டி வையம்மா

ஆஹாஹ்சின்ன எஜமான் வந்தாச்சு சீக்கிரமாய் அடுப்பை மூட்டி உப்புமா கிண்டி வையம்மா அம்மா உப்புமா கிண்டி வையம்மா

சின்ன ராஜாவை எந்நாளும் தாஜாத்தான் பண்ணிக்கிட்டு கூஜாவைக் தூக்கி வரும் கூறுக்கெட்ட கோமாளி

பக்குவம் என்ன சொல்லையா ஐயா பக்குவம் என்ன சொல்லையா


காப்படி தண்ணி ஊத்தி டொயிங் டொயிங் டொயிங் டொயிங் அரைப்படி ரவா போட்டு டொயிங் டொயிங் டொயிங் டொயிங்

காப்படி தண்ணி ஊத்தி அரைப்படி ரவா போட்டு ஒரு படி உப்பு போட்டு உனக்கும் எஜமானுக்கும்

உப்புமா கிண்டி வையம்மா அம்மா உப்புமா கிண்டி வையம்மா

எண்ணெய் ஊத்தவா டொயிங் டொயிங் டொயிங் டொயிங் நெய்யை ஊத்தவா டொயிங் டொயிங் டொயிங் டொயிங்

எண்ணெய் ஊத்தவா நெய்யை ஊத்தவா இஞ்சியை நறுக்கி போட்டு ஏலக் கிராம்பு போடவா இஞ்சியை நறுக்கி போட்டு ஏலக் கிராம்பு போடவா

பக்குவம் என்ன சொல்லையா ஐயா பக்குவம் என்ன சொல்லையா

கடுகும் உளுந்தும் போடாதே கருவேப்பிலையும் போடாதே கடுகும் உளுந்தும் போடாதே கருவேப்பிலையும் போடாதே விருப்பமுடனே நல்ல வேப்பெண்ணை உட்டு தாளி

உப்புமா கிண்டி வையம்மா அம்மா உப்புமா கிண்டி வையம்மா