Uyire En Uyire

Uyire En Uyire Song Lyrics In English


ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

உயிரே என் உயிரே
எந்த திசை போகிறாய்
கனவே என் கனவே
அவள் இன்றி தோன்றினாய்

எனக்குள்ளே நிகழ்ந்ததை
எழுதினேன் கனவுகளில்
கனவுகள் நிஜம் என்று
நிறுத்தினேன் நினைவுகளில்

உயிரே என் உயிரே
எந்த திசை போகிறாய்

போச்சு போச்சுடா போச்சுடா
பல பேச்சலர் கனவுகள் போச்சுடா
மூச்சு மூச்சுடா மூச்சுடா
அவ கூடவே போகுது மூச்சுடா

ஒரு முறை ஒரு முறை பார்த்துக்க
இனி பார்த்திட தருணம் வராது
ஏக்கத்தை முழுசா தீத்துக்க
இனி பேசவும் பழகவும் தகாது
போச்சுடா போச்சுடா போச்சுடாஆ

கல்விச்சாலை நாளில்
சாய்ந்திருந்தாய் தோளில்
அந்த சுகம் காதல் என்கிறேன்
என்னை சுற்றி நீயும்
உன்னை சுற்றி நானும்
வந்ததுதான் காதல் என்கிறேன்

உன் பார்வைகள் மூலம்
நீ தந்த ஏக்கம்
அதன் பெயர் காதல் என்கிறேன்
உன் வார்த்தைகள் மூலம்
நான் கொண்ட மோகம்
அதை நான் காதல் என்கிறேன்
உன் நினைவே சுவாசம் என்றால்
உண்மை என்கிறேன்

உயிரே என் உயிரே
உயிரே என் உயிரே


ஆஹாஹா ஆஆஅஆஆஅ
ஹஹஹஹஹா

தித்திக்கும் தித்திக்கும்
வாலிபர் கூட்டங்களும்
முட்டிதான் ருசிக்கத்தான்
கண்களின் பார்வைகளும்
இது மகரந்தம்
சேர்ந்திடும் நேரம்
பல வண்டுகள் வட்டம் போடும்
அடி பல பல மின்னும்
பொன்னிற மேனியை
சந்தன சாரல் மூடும்
அடி பழம்கொத்தி தின்னும்
பார்வைகள் பார்த்தால்
கனி என உன்னை தீண்டும்
தந்தன தந்தன தானனானான

ஹாஆஆஹாஆஅ

புத்தகங்கள் ஏல்லாம்
முத்தங்களின் காயம்
மூடி வைத்து பாதுகாக்கிறேன்
என் அறையில் எங்கும்
உன் பெயரின் கீறல்
இன்னும் அதை பூஜை செய்கிறேன்

உன் விரல் பட்டு
என் இடம் உள்ள
காகிதத்தில் உன்னை பார்க்கிறேன்
உன் தலை தொட்ட
பூக்களை கூட
பத்திரமா சேர்த்து வைக்கிறேன்
தேவதையே உன்னை மட்டும்
தொலைத்தேன் என்கிறேன்

உயிரே என் உயிரே
எந்த திசை போகிறாய்
கனவே என் கனவே
அவள் இன்றி தோன்றினாய்

எனக்குள்ளே நிகழ்ந்ததை
எழுதினேன் கனவுகளில்
கனவுகள் நிஜம் என்று
நிறுத்தினேன் நினைவுகளில்

ஹாஆஅஆஅஆஅஆஅ