Uzhaipa Thilla

Uzhaipa Thilla Song Lyrics In English


உழைப்பதிலா உழைப்பை
பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல்
என் தோழா

உழைப்பவரே உரிமை
பெறுவதிலே இன்பம்
உழைப்பவரே உரிமை
பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல்
என் தோழா

கல்வி கற்றோம்
என்ற கர்வத்திலே இன்பம்
கண்டவர் உண்டோ சொல்
என் தோழா

கல்லாத பேரையெல்லாம்
கல்வி பயிலச் செய்து
காண்பதில் தான் இன்பம்
என் தோழா

இரப்போர்க்கு ஈதலிலும்
இரந்துண்டு வாழ்வதிலும்
இன்பம் உண்டாவதில்லை
என் தோழா


அரிய கைத் தொழில் செய்து
அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம்
என் தோழா
அன்புடன் வாழ்வதின்பம்
என் தோழா

பட்டத்திலே பதவி
உயர்வதிலே இன்பம்
கிட்டுவதே இல்லை என் தோழா

உனை ஈன்ற தாய் நாடு
ஆ ஆ
உனை ஈன்ற தாய் நாடு
உயர்வதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல்
என் தோழா