Va Kathirukka Neramillai

Va Kathirukka Neramillai Song Lyrics In English


வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ
நீ பூத்திருக்கும்
வாச முல்லை ஓ

விரக தாபம்ம்ம்
விளையும் காலம்ம்ம்
விலகி இருந்தால்
வாடை வாட்டும் வா

வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ
நான் பூத்திருக்கும்
வாச முல்லை ஓ

ஏதோ ஓர் பாதரசம்
ஏறும் உயிர் நாடியிலே ஹா
காந்தம் உருவாகுமடி
கூடும் இளம் ஜோடியிலே

வளைக்கைகள்
நீ சொன்னால்
வளைக்காமல் போகாது
வலிக்காது சீராட்டு
சலிக்காது பூ மாது

ஆசை ஊற்று போலே
வெள்ளமாக பாயும் நேரமே
ஆடை ஈரம் ஆக
நீயும் நானும் நீந்த வேண்டுமே

வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ
நான் பூத்திருக்கும்
வாச முல்லை ஓ

விரக தாபம்ம்ம்
விளையும் காலம்ம்ம்
விலகி இருந்தால்
வாடை வாட்டும் வா


வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ

மாலை மணி ஐந்தடித்தால்
மான்தான் உனைத்தேடி வரும்
காவல் ஒன்று போட்டு வைத்தால்
கால்கள் அதைத் தாண்டி வரும்

இடை சேர்ந்த பின்னாலே
இடைவேளை கூடாது
இணை சேர்ந்த ஜீவன்கள்
தனித்தென்றும் வாழாது

அன்பே நீல வண்ணம்
வானை என்றும் நீங்கிடாது
மீட்டும் விரல் இல்லாது
வாழ்வதேது வீணையானது

வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ
நீ பூத்திருக்கும்
வாச முல்லை ஓ

விரக தாபம்ம்ம்
விளையும் காலம்ம்ம்
விலகி இருந்தால்
வாடை வாட்டும் வா

வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ
நீ பூத்திருக்கும்
வாச முல்லை ஓ