Va Va Enkooda

Va Va Enkooda Song Lyrics In English


இசையமைப்பளார் :
சூரஜ் எஸ் குருப்

வா வா என்கூட
வாழ சொல்லித்தரேன்
கவலை இல்லாம வாழ

நான் தான் சொர்க்கத்தையே
விலைக்கு வாங்கி இருக்கேன்
வந்து தங்கிக்கோ மேல

பச்சை தண்ணி கூட
நீயும் பத்த வெச்சா
பத்திக்கும்
மச்சான் நெஞ்ச என்ன ஆகும்
பார்த்த தல சுத்திக்கும்
உச்சந்தல மோதினாலே
மூல சூடு ஏறிக்கும்
முழுசா உன்ன பார்த்து புட்ட
பித்து புடிக்கும் யாருக்கும்

வாழ்க்கை இங்க
ஒரு முறை தான்
வாழ நீயும் கத்துக்கடா
நேற்றும் நாளையும்
நமக்கு இல்லை
அந்த உண்மையா ஒத்துக்கடா

இந்த நிமிஷம் தானே
உன் சொந்த நிமிஷம் ஆகும்
அட கெடச்சத நீ விட்டு விடாதே
கவலை இல்லா மனுஷன்
இங்கு யார் இருக்கா சொல்லுடா
எது நடந்த போதும்
நமக்கு ஜாலி தான்

வா வா என்கூட
வாழ சொல்லித்தரேன்
கவலை இல்லாம வாழ

நாட்டு கட்ட மாட்டி கிட்டா
இழுத்து கட்டு கட்டு
அல்வா துண்டு போல இருக்கா
தின்னு புட்டு புட்டு
எல்லாத்துக்கும் விலை இருக்கு
வீசு துட்டு துட்டு
திருப்பதிக்கு குடுக்கலாமா
பெரிய லட்டு லட்டு


கோழி ருசியா
கொழம்பு வெச்சு பாரு
பட்ட சரக்க சரக்க
ஏத்து ஏத்து நார

ஹான்
சந்தோசமா வாழ
ரொம்ப வழி இருக்கு
ஹான்
எல்லாத்தையும்
சொல்லி தரேன் நான் உனக்கு
ஹான்
யார் என்ன சொன்ன போதும்
நமக்கு எதுக்கு
ஹான்
உன் வாழ்க்கை
உனக்கே தான்டா

ஹான்
இன்பம் துன்பம் ரெண்டும்
இங்க சேர்ந்து இருக்கு
ஹான்
என்ன வேணும் கேளு தாரேன்
நான் உனக்கு
ஹான்
ஏக பட்ட ஆசைகளும்
நமக்கு இருக்கு
ஹான்
எல்லாத்தையும்
வாழ்ந்து பாருடா

இளமை என்னும்
காலம் தானே
புதுமை தேடும் பொக்கிஷம்டா
இளமை போன திரும்பாதுடா
இருக்கும் போதே நீ வாழுடா

உத்தமனா இங்க
அட யார் இருக்க கூறு
ரொம்ப உண்மையாக
வாழக்கூடாதே

நீயும் நானும் வேறு
நாம சேர்ந்த தாண்டா ஜோரு
அதில் கடவுளுக்கும் பங்கிற்கு
காரணம் வேறு

வா வா என்கூட
வாழ சொல்லித்தரேன்
கவலை இல்லாம வாழ