Va Va Mysooru

Va Va Mysooru Song Lyrics In English


வா வா மைசூரு மல்லியே
இன்பவல்லியே
ஆஹாஅன்புக் குயில் நீதான்டி
அந்தி வெய்யில் நிறம்தான்டி
பச்சைக்கிளி போலே இருக்கிறே நீ
பச்சரிசி போலே சிரிக்கிறே

அட வா வா முந்நூறு மில்லியே
ஜோடி இல்லையே
ஆஹா அண்டங்காக்கா நீதான்டி
அட்டக்கரி நிறம்தான்டி
பத்ரகாளி போலே இருக்கிறே நீ
வில்லன்களை போலே சிரிக்கிறே

இன்னும் என்ன சொல்லிடு கண்ணா
மல்லிகையை கிள்ளிடு மன்னா
துள்ளுது உள்ளம் கிள்ள கிள்ள

பொல்லாத கில்லாடி நீதான்
ஒட்டாதே ஒரசாதே

ஆஹாஹாஆஹாஹா

சிலம்பொலி போலே சிரிக்கிறே பொண்ணு
கலைமானின் இனம்தானோ உன் கண்ணு

இடி போலே சிரிக்கிறே பொண்ணு
கோட்டானின் இனம்தானோ உன் கண்ணு

என்னை நீ புகழாதே
இளநெஞ்சு தாங்காதே
நாளும் நீ என்னை நீங்காதே

அடி நீதான்டி சண்டைக்காரி
எலிவாலு கொண்டக்காரி

விளையாட வாமாமா

அட வா வா முந்நூறு மில்லியே
ஜோடி இல்லையே
ஆஹா அண்டங்காக்கா நீதான்டி
அட்டக்கரி நிறம்தான்டி
பத்ரகாளி போலே இருக்கிறே நீ
வில்லன்களை போலே சிரிக்கிறே

மழை முகில் போலே கூந்தலைக் கண்டேன்
பெண்ணே நீ பொன்னிலவு தெரியாதா


தார்ச்சட்டி போலே தலைமுடி கண்டேன்
பெண்ணே நீ பேய்தானே புரியாதா

அன்பே நீ பாராட்டு
என்னைத்தான் சீராட்டு

போதும் உன் பாட்டை நிப்பாட்டு

அடி கிளி மூக்கு ஒய்யாரி
என் சளி மூக்கு சிங்காரியே

உறவாட வாமாமா

போய்யா முந்நூறு மில்லியே
புத்தி இல்லையே
ஆஹாஉன்னக் கண்டு மிரளாத
சின்னப் பொண்ணு கிடையாது
உன் அழகு நான்தான் பாடவா
நான்உன்னை கண்டு ஓடி ஒளியவா

அட வா வா முந்நூறு மில்லியே
ஜோடி இல்லையே
ஆஹா அண்டங்காக்கா நீதான்டி
அட்டக்கரி நிறம்தான்டி
பத்ரகாளி போலே இருக்கிறே நீ
வில்லன்களை போலே சிரிக்கிறே

இன்னும் என்ன சொல்லிடு கண்ணா
மல்லிகையை கிள்ளிடு மன்னா
துள்ளுது உள்ளம் கிள்ள கிள்ள

பொல்லாத கில்லாடி நீதான்
ஒட்டாதே ஒரசாதே

ஆஹாஹாஆஹாஹா