Vaadi En Rukkumani

Vaadi En Rukkumani Song Lyrics In English


வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி
அடி வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி
அத்த பெத்த அழக பாத்து
அசந்து போனேண்டி ஹேய்
அவுந்த வேட்டி கட்ட கூட
மறந்து போனேண்டி ஹேய்

வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி
அடி வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி

ஊதியே பாக்காத நாதஸ்வரம்
கோலையே பாக்காத பீதாம்பரம்
வீசியே பாக்காத வெண் சாமரம்
ஒத்தையில் நின்னாலே என்னா சுகம்

கண்ணாலம் கட்டாம கச்சேரி வெக்காம
சொக்குறேன் நிக்குறேன் சின்ன புள்ள
அடி சொன்னாலே நான் வாரேன் பூமால நான் தாரேன்
சித்திர பங்குனி மாசத்துல
போகுதடி நாளுதான் தேடுதடி ஆளுதான்
வாடுதடி நெஞ்சுதான் வஞ்சி ஒரு பிஞ்சுதான்
ஏ ஆளாகி நாளாச்சு

வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி
கிட்ட வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி

டொட்டொடோய் டொட்டொடோய் டோய்
டொட்டொடோய் டொட்டொடோய் டோய் ( இசை )


டொட்டொடோய் டொய்டொய்
டொட்டொடோய் டொய்டொய்
டொய்டொய் டொய்டொய் டொய்

கூடையில் பூவோடு நிப்பேனடி
கொண்டையில் நான் தானே வப்பேனடி
சாடையில் எல்லாமே பாத்துகிறேன்
என்ன நீ சொன்னாலும் ஏத்துக்குறேன்

உன்னால நான் வாட உள்ளூர போராட
இன்னமும் தள்ளினா தாங்காதடி
அடி சல்லாபம் இல்லாம சந்தோசம் காணாம
கண்ணுதான் எப்பவும் தூங்காதடி
ராத்திரிக்கு ராத்திரி நானு ஒரு மாதிரி
நீல நிலா காயுது நெஞ்சில தான் பாயுது
ஏ பாழ்த்தாதே ராசாத்தி

வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி
அடி வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி
அத்த பெத்த அழக பாத்து
அசந்து போனேண்டி ஹேய்
அவுந்த வேட்டி கட்ட கூட
மறந்து போனேண்டி ஹேய்

வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி
கிட்ட வாடி என் ருக்குமணி
ராத்திரி பத்து மணி