Vaadi Enthan Kadhanayaki

Vaadi Enthan Kadhanayaki Song Lyrics In English

வாடி எந்தன் கதாநாயகி வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ

கண்ணில் மின்னும் கதாநாயகா கன்னிப் பெண்ணை தொடும் காதலா மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா

சித்திர செங்கனி மீது நீ முத்திரை வைக்கிற போது ஆசை நெஞ்சில் போதை ஏறுதே

மின்னிடும் செவ்விதழ் ஓரம் தேன் சிந்திடும் பொன்னெழில் நேரம் மோகம் வந்து ராகம் பாடுதே

ராகம் பாட வேகம் இன்னும் கூடும் வேகம் தீர தேகம் தந்தால் போதும் ராகம் பாட வேகம் இன்னும் கூடும் வேகம் தீர தேகம் தந்தால் போதும்

மலருடல் தழுவிட மேடை போடு மணி விழி மயங்கிட மார்பில் ஆடு மணமாலை வருகின்றது

வாடி எந்தன் கதாநாயகி வண்ணப் பாட்டின் தமிழ் பல்லவி நெஞ்சில் பொங்கும் புது காவிரி நீ

கண்ணில் மின்னும் கதாநாயகா கன்னிப் பெண்ணை தொடும் காதலா மங்கை தேடும் கங்கை நீயே வாவாவா

மல்லிகை புன்னகையாலே ஒரு மையலை தந்தவள் நீயே மானே எந்தன் மையல் தீர்க்க வா

மன்மதன் மந்திரம் போட்டு பொன் மங்கல வீணையை மீட்டு மன்னன் மீட்ட கண்கள் மூடுமே

பகலை இரவாய் மாற்றிப் பார்ப்போம் வாவா பார்வையாலே பேசித் தீர்ப்போம் வா வா பகலை இரவாய் மாற்றிப் பார்ப்போம் வாவா பார்வையாலே பேசித் தீர்ப்போம் வா வா

குலுங்குது குலுங்குது கொய்யாப் பூவு குலுங்கிட குலுங்கிட கையால் நீவு பனி வாடை எனை வாட்டுது