Vaan Mathi |
---|
வான் மதி மறைந்திடும் நேரம்
தீ விழி தூங்காது
பூ அது புயலென மாறும்
தேன் துளி மாறாது
காலம் ஒரு போதும்
மறைந்து விடாது
தேடி நீ ஓடு கடந்து விடாது
பாரம் சுமையாக இருந்து விடாது
இலக்கை உனதாக மதி வழி நடையிடு
அனலின் விழி என்றும் அழ வேண்டாம்
கோப கண்ணீரை தர வேண்டாம்
தோல்வி எனும் வார்த்தை இனி வேண்டாம்
உன் திறமை உலகாளும் மறக்காதே
தடைகள் உன் வாழ்வை முடக்காது
தைரியம் என்றும் தோற்காது
மடைகளும் மழையை தடுக்காது
இந்த சாம்பலின் காற்று தெரியாது
வான் மதி மறைந்திடும் நேரம்
தீ விழி தூங்காது
பூ அது புயலென மாறும்
தேன் துளி மாறாது
காலம் ஒரு போதும்
மறைந்து விடாது
தேடி நீ ஓடு கடந்து விடாது
பாரம் சுமையாக இருந்து விடாது
இலக்கை உனதாக மதி வழி நடையிடு
ஹோ ஓ ஓஓஒ ஓ ஓ
ஹோ ஓஒ ஒ ஹோ ஓ ஓ ஒ
அச்சமில்லையே அச்சமில்லையே உனக்கு
துணிவே துணையென விதை ஒன்று போடு
உண்மை இருந்தால் உண்மை இருந்தால் எதுவும்
சரித்திரம் அதுதான் நீ ஓடு
எண்ணம் உயர்ந்து
எண்ணம் உயர்ந்து எழுந்தால்
வேர்வை துளி உன்னில் உழைப்பே தானே
தன்னை மறந்து தன்னை மறந்து நீயும்
இலக்கினை அடைய போராடு
நீ ஒரு முறை தான்
பூ உலகில் பிறந்திடுவாயோ
பெண் என்பவள்தான்
உலகில் அரிதான பிறப்பினை எடுப்பவள்
தடைகள் உன் வாழ்வை முடக்காது
தைரியம் என்றும் தோற்காது
மடைகளும் மழையை தடுக்காது
இந்த சாம்பலின் காற்று தெரியாது
அனலின் விழி என்றும் அழ வேண்டாம்
கோப கண்ணீரை தர வேண்டாம்
தோல்வி எனும் வார்த்தை இனி வேண்டாம்
உன் திறமை உலகாளும் மறக்காதே
வான்மதி மறைந்திடும் நேரம்
தீ விழி தூங்காது
பூ அது புயலென மாறும்
தேன் துளி மாறாது
காலம் ஒரு போதும்
மறைந்து விடாது
தேடி நீ ஓடு கடந்து விடாது
பாரம் சுமையாக இருந்து விடாது
இலக்கை உனதாக மதி வழி நடையிடு