Vaanam Boomi Vaazhthum

Vaanam Boomi Vaazhthum Song Lyrics In English


ஆண் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான் காலந்தோறும் தொடரும் கதை இதுதான் நிலவு நீலமேகம் திசைகள் மாறிப் போகலாம் உலகம் உள்ள நாள்வரை விலகிடாமல் வாழலாம் பெண் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்

ஆண் : தாலாட்ட தாயில்லை சோறூட்ட ஆளில்லை ஊரெல்லாம் வீடாக வாழ்ந்தேனே

ஆண் : தெய்வம் போல் நீ வந்தாய் வாழ்வெல்லாம் நீ தந்தாய் நான் கொண்ட சொந்தங்கள் நீதானே

ஆண் : நாம் என்றும் நீங்காத கிளிக்கூட்டமே நீரோடு நீர் சேரும் நதியோட்டமே


வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான் காலந்தோறும் தொடரும் கதை இதுதான் வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்

பெண் : சங்கீதம் பாடட்டும் சந்தோஷம் தேடட்டும் நான் பெற்ற பிள்ளைகள் பூப்போலே ஆண் : ஒவ்வொன்றும் தேன் மொட்டு ஒய்யார பூஞ்சிட்டு ஒன்றல்ல நூறாகும் வாழ் நாளே

பெண் : ஏதேதோ ஆசைகள் இசைப் பாடத்தான் எங்கேயோ எண்ணங்கள் அலை பாயத்தான் ஆண் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான் பெண் : காலந்தோறும் தொடரும் கதை இதுதான் ஆண் : நிலவு நீலமேகம் திசைகள் மாறிப் போகலாம் பெண் : உலகம் உள்ள நாள்வரை விலகிடாமல் வாழலாம் இருவர் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்