Vaanam Paarthen

Vaanam Paarthen Song Lyrics In English


நதியென நான் ஓடோடி
கடலினை தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சுக் காற்று போன பின்பு
நான் வாழ்வதோ

தீராத காயம்
மனதில் உன்னாலடி
ஆறாதடி

வானம் பாா்த்தேன்
பழகிய விண்மீன் எங்கோ
போக பாறை நெஞ்சம் கரைகிறதே

ஏனோ இன்று தூரம்
போனால் இடப் பக்கம் துடித்திடும்
இருதய இசையென இருந்தவள்
அவள் எங்கு போனாலோ

இரு விழி இமை
சேராமல் உறங்கிட மடி
கேட்கிறேன் மழையினை
கண் காணாமல் மேகம் பாா்த்து
பூமி கேட்க நான் பாடினேன்
நீ இல்லா நானோ நிழலை
தேடும் நிஜம் ஆனேனடி


வானம் பாா்த்தேன்
பழகிய விண்மீன் எங்கோ
போக பாறை நெஞ்சம் கரைகிறதே

எங்கும் பாா்த்தேன்
உந்தன் பிம்பம் கனவிலும்
நினைவிலும் தினம் தினம்
வருபவள் எதிாினில்
இனி வர நேராதோ

நதியென நான் ஓடோடி
கடலினை தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
தூண்டில் முள்ளில் மாட்டிக்
கொண்ட மீன் நானடி ஏமாறும்
காலம் இனிமேல் வேணாமடி கை சேரடி

வானம் பாா்த்தேன்
பழகிய விண்மீன் எங்கோ
போக பாறை நெஞ்சம் கரைகிறதே