Vaanathula Velli |
|---|
வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியில வந்ததென்ன
வீதியிலே வந்த ரதம்
ஒரு சேதி இங்கு சொன்னதென்ன
வண்ண ஆடை
கட்டி நின்றதென்ன
கண்ணார கண்டதென்ன
கையோடு கொண்டதென்ன
வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியில வந்ததென்ன
வானத்துல வெள்ளி ரதம்
மரக்கிளையில் காத்தடிக்க
பழம் உதிரும் சோலை இது
பழுத்த பழம் காத்திருக்க
அணில் கடிக்கும் வேளை இது
அணில் போல் உருமாறவா
அடியேன் பசியாறவா
அதற்கோர் தடை போடவா
உடையால் என்னை மூடவா
புதுப் பூவே நான் தொடும் போது
போதை வரக் கூடுமா
பனிச்சாரல் மேல் விழும் போது
ஆசை அலை பாயுமா
நங்கையின் மெல்லிய இடை
நூல் போல் ஆட
என்னையும் உன்னையும்
இணைத்தேன் நான்
வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியிலே வந்ததென்ன
வீதியிலே வந்த ரதம்
ஒரு சேதி இங்கு சொன்னதென்ன
வண்ண ஆடை
கட்டி நின்றதென்ன
கண்ணார கண்டதென்ன
கையோடு கொண்டதென்ன
வானத்துல வெள்ளி ரதம்ஹ்ஹீம்
நதியில் எழும் நீரலை போல்
நினைவில் எழும் நாயகி நான்
ராமன் எனும் ராஜனுக்கு
அமைந்து விட்ட ராணியும் நீ
நெடு நாள் உள்ள சொந்தமோ
நிலையாய் வந்த பந்தமோ
பிரிவே இனி இல்லையே
பனிவாய் மடல் முல்லையே
இளம் தோகை
தோள்களில் சாய
ஏனோ ஒரு ஏக்கமோ
மலர் மாறன்
பூக்களில் போடும்
பாணம் என்னைத் தாக்குமோ
தொட்டதும் பட்டதும்
சுகமே தோன்ற
மன்னவன் கைகளில்
விழுந்தேன் நான்
வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியிலே வந்ததென்ன
வீதியிலே வந்த ரதம்
ஒரு சேதி இங்கு சொன்னதென்ன
வண்ண ஆடை
கட்டி நின்றதென்ன
கண்ணார கண்டதென்ன
கையோடு கொண்டதென்ன
வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியில வந்ததென்ன
வானத்துல வெள்ளி ரதம்
