Vaaray En Thozha

Vaaray En Thozha Song Lyrics In English


வாராய் என் தோழா வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ
பதினாறும் பெற்று தலைவா நீயும்
பெருவாழ்வு காண வாராயோ

வாராய் என் தோழா வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ

இள மீசை கொண்ட குமரா
எட்டு முழ வேஷ்டி சூடும் அழகா
கலையாத கிராப்பு தலையா உன்
கண்ணென்ன காதல் வலையா

சரியான ஜோடி பிடிச்சாயோ
லவ் பண்ண நீயும் துடிச்சாயோ
சரியான ஜோடி பிடிச்சாயோ
லவ் பண்ண நீயும் துடிச்சாயோ
வாராய் என் தோழா வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ

பொதுவாக சொல்லப் போனால்
நல்ல பெண்டாட்டி தாசன் நீயே
பிடிஉஷாவைப் போலே அவள்
பின்னாடி ஓடுவாயே

புடவைகள் நீயும் துவைப்பாயோ
தினந்தோறும் சோறு சமைப்பாயோ
புடவைகள் நீயும் துவைப்பாயோ
தினந்தோறும் சோறு சமைப்பாயோ
வாராய் என் தோழா வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ


அளவோடு பிள்ளை பெற்று
நீ வளமாக வாழ வேண்டும்
எளிதான வழிகள் உண்டு
அது எல்லோர்க்கும் தெரியும் இன்று

விளையாட்டில் இன்பம் மலராதோ
விலைவாசி போல உயராதோ
விளையாட்டில் இன்பம் மலராதோ
விலைவாசி போல உயராதோ

வாராய் என் தோழா வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ
பதினாறும் பெற்று தலைவா நீயும்
பெருவாழ்வு காண வாராயோ

வாராய் என் தோழா வாராயோ
மணப் பந்தல் காண வாராயோ