Vaarayo Vennilave

Vaarayo Vennilave Song Lyrics In English


வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே

அகம்பாவம் கொண்ட சதியாள்
அறிவால் உயர்ந்திடும் பதி நான்
அகம்பாவம் கொண்ட சதியாள்
அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே
சிதைந்தது இதம் தரும் வாழ்வே

வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையேஏ
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையேஏ
வாராயோ வெண்ணிலாவே

வாக்குரிமை தந்த பசியால்
வாழ்ந்திடவே வந்த சதி நான்
வாக்குரிமை தந்த பசியால்
வாழ்ந்திடவே வந்த சதி நான்
நம்பிடச் செய்வார் நேசம்
நடிப்பதெல்லாம் வெளி வேஷம்

வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையேஏ
வாராயோ வெண்ணிலாவே


தன் பிடிவாதம் விடாது
என் மனம் போல் நடக்காது
தன் பிடிவாதம் விடாது
என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது
நம்மையும் பேச விடாது

வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே

அனுதினம் செய்வார் மோடி
அகமகிழ்வார் போராடி
அனுதினம் செய்வார் மோடி
அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால்
நல்லறமாமோ நிலவே

இருவர் : வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையேஏ
வாராயோ வெண்ணிலாவே