Vaasal Idhu Vaasal

Vaasal Idhu Vaasal Song Lyrics In English


வாசல் இது வாசல் தலைவாசல் வாழ்க்கை சொல்லும் வாசல் முதல்வாசல் இரவுக்கு விடியல் தலைவாசல் எங்களுக்கு உலகே தலைவாசல்

வாசல் இது வாசல் தலைவாசல்

வாழ்க்கை என்பதே பள்ளிக்கூடம்தான் வாழும் அனுபவம் வாழ்க்கை பாடம்தான் நேற்று வரப்போவதில்லை நாளை நம் கையில் இல்லை இன்று நமதென்று கொண்டால் இல்லை மனதோடு தொல்லை கார்த்திகை போனாலே மழையே பெய்யாது வாலிபம் போனாலே வாழ்க்கை செல்லாது துள்ளி ஏழு

வாசல் இது வாசல் தலைவாசல்


இளமை என்பது வானவில்லடா இளமை தீரும் முன் எழுந்து நில்லடா மேகம் விலை கேட்பதில்லை காற்று கடன் கேட்பதில்லை பூமி உனக்கான ரோஜா புகுந்து விளையாடு ராஜா பாதை என்றாலும் முள்ளும் அங்குண்டு முள்ளே நின்றாலும் பாதை ஒன்றுண்டு கண்டுபிடி

வாசல் இது வாசல் தலைவாசல் வாழ்க்கை சொல்லும் வாசல் முதல்வாசல் இரவுக்கு விடியல் தலைவாசல் எங்களுக்கு உலகே தலைவாசல்

வாசல் இது வாசல் தலைவாசல்