Vaiyambatti

Vaiyambatti Song Lyrics In English


தந்தானேனா தந்தானேனா
தந்தானேனானா தந்தானேனா

வையம்பட்டி வாழக்குட்டி
தப்பாட்டம் ஆடு வேசம் கட்டி
பாட்டு கட்டி நீ ஆடுனா
மேகங்கள் போடும் ஆலங்கட்டி

மல மேல ஒழப்பு
பள்ளத்தில் பொழப்பு
மல ஜாதி முன்னேறுமா
முன்னேறுமாஆஆஆ

பணக்கார கரண்டி
மழை எல்லாம் சொரண்டி
வனக்காடு பழுதாச்சு அம்மா
பலகாலமாஆஆஆ

மலைக்கு போய் மொட்ட போடு
மலைக்கே மொட்ட போட வேணா
மலையும் மரமும் நம்ம சாமி
கொண்டாடுங்ககூத்தாடுங்க

தாய் மாமன் காத்து
தாய்பால் ஊத்து
உசுரு பொழைக்க இது போதும்
மும்மாரி கூட மோசம் செஞ்சாலும்
கையே எதிர்க்காலம்

தேகத்தில் வலுவுண்டு மானே
இங்க தினையோடு சாப்பாடு தேனே
மேகத்தின் போர்வைக்கு கீழே
நாங்க காதல் செய்வோம்
களவும் செய்வோம்

புல்லோடு தூங்கும்
பனி துளி சேர்த்து
சூரிய ஒளியை கோர்போமே
சந்தோசம் உண்டு சாதிகள் இல்ல
சமத்துவம் காண்போமே


தென் நாட்டு தாகம்
தீர்க்கும் தெய்வம்
மேற்க்கு தொடர்ச்சி மலைதானே
மனுசனும் கடவுளும் தோன்றும் முன்னாலே
வாழ்ந்த மலைதானே

 பறவைக எச்சம்தான் காடு
எங்க பண்பாட்டில் காடேதான் வீடு
 மரமொன்று மல மேல சாஞ்சா
நாங்க தூக்கம் கெட்டு
துக்கம் கேட்போம்

தன் வீட்டு மேல
தீ வைக்கும் மனுசா
நம்மோட காட்ட அழிக்காதே
பேராச புடிச்ச பேய் மனக்காரா
தாய் முலை அறுக்காதே

வையம்பட்டி வாழ குட்டி
தப்பாட்டம் ஆடு வேசம் கட்டி
பாட்டு கட்டி நீ ஆடுனா
மேகங்கள் போடும் ஆலங்கட்டி

மல மேல ஒழப்பு
பள்ளத்தில் பொழப்பு
மல ஜாதி முன்னேறுமா
முன்னேறுமாஆஆஆ

பணக்கார கரண்டி
மழை எல்லாம் சொரண்டி
வனக்காடு பழுதாச்சு அம்மா
பலகாலமாஆஆஆ