Vanamevum Raajakumaraa

Vanamevum Raajakumaraa Song Lyrics In English


வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
மனமோகனா சுகுமாரா
மனமோகனா சுகுமாரா
மறவேன் உன்னை எழில் தீரா
மறவேன் உன்னை எழில் தீரா

வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரி
வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரி
மனம் போலே நாம் இனி பாரில்
மனம் போலே நாம் இனி பாரில்
மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்
மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்

நிழல் நீயே தேகம் நானே
நிஜம் ஈது கேள் பெண் மானே

நிழல் நீயே தேகம் நானே
நிஜம் ஈது கேள் பெண் மானே

மலர் மேவும் தென்றல் போலே
நிலை மாறுதே உன்னாலே

வனமேவும் ராஜகுமாரா


மண்ணாளும் வீரரெல்லாம்
ஆஆஆஆஆஆஆ
மண்ணாளும் வீரரெல்லாம்
வணங்க வரும் மன்னவரே
அல்லாவின் அருளாலே
எனக்கெனவே பிறந்தவரே
ஆஆஆஆஆஆஆ

உல்லாச வேளையிலே ஏ
ஓவியப் பூங்காவினிலே
ஆஆஆஆஆஆஆ
உள்ளன்பால் தேடி வந்தே
உறவாடும் பூங்குயிலே
உறவாடும் பூங்குயிலே

கலை வீசும் கண்களாலே
கனிந்தேன் கண்ணே அன்பாலே

கவி பாடும் இன்பத்தாலே
கவர்ந்தாய் கண்ணா இந்நாளே

இருவர் : வளமாகும் காதலினாலே
மகிழ்வாகினோம் இனி மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனி மேலே
வளமாகும் காதலினாலே