Vanathil

Vanathil Song Lyrics In English


வனத்தில் வண்ண மலர்கள்
மலரில் வீசும் தென்றல்
தென்றலில் வீசும் வாசம்
அது தெய்வத்தின் காணிக்கை
ஓ தெய்வத்தின் காணிக்கை
அந்த தெய்வம் தந்தது
அன்பு யார்க்கும் உள்ளது
அதில் எத்தனைக் கோணம்
எத்தனை பார்வையோ

வனத்தில் வண்ண மலர்கள்
மலரில் வீசும் தென்றல்
தென்றலில் வீசும் வாசம்
அது தெய்வத்தின் காணிக்கை
ஓ தெய்வத்தின் காணிக்கை

கொடியில் வந்த பூ மலர்
செடியில் பூப்பதில்லையே
இந்த பூவில் இந்த வாசம்
என்று வைத்த தெய்வமே
ஒருவர்க்குள்ள உள் மனம்
ஒருவர்க்கிருப்பதில்லையே
இந்த மனதில் இந்த பண்பு
என்று வைத்த தெய்வமே

நாம் அனு தினம் பார்க்கிற உலகத்தில்
பல வித விதமாகிய மனிதர்கள்
நாம் படிக்கிற முகங்களில் படிக்கலாம்
நகைக்கின்ற முகங்களை மறக்கலாம்
படிக்கப் படிக்க தினம் புதிய அனுபவம் தானே


வனத்தில் வண்ண மலர்கள்
மலரில் வீசும் தென்றல்
தென்றலில் வீசும் வாசம்
அது தெய்வத்தின் காணிக்கை
ஓ தெய்வத்தின் காணிக்கை
அந்த தெய்வம் தந்தது
அன்பு யார்க்கும் உள்ளது
அதில் எத்தனைக் கோணம்
எத்தனை பார்வையோ

வனத்தில் வண்ண மலர்கள்
மலரில் வீசும் தென்றல்
தென்றலில் வீசும் வாசம்
அது தெய்வத்தின் காணிக்கை
ஓ தெய்வத்தின் காணிக்கை