Vatta Pandhu Thottu

Vatta Pandhu Thottu Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

வட்டப் பந்து தொட்டு விளையாட வந்த வட்ட நிலா வண்ணச் சிந்து சொல்லி உறவாட வந்த சின்ன நிலா

பொட்டு வைத்துக் கொண்டதோ புன்னகைத்து நின்றதோ கிட்ட கிட்ட வந்ததோ கட்டி முத்தம் தந்ததோ தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ

சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம்

பாசக் கரங்களில் இன்பச் சுரங்கத்தைப் பார்க்கிறேன் அள்ளி எடுத்திடச் சொல்லிக் கொடு எனக் கேட்கிறேன் சொல்லித் தர இது பள்ளிப் படிப்பல்ல காதலி கட்டிக் கொள்ள மனம் கற்றுக் கொள்ளும் ஒரு மாதிரி

உள்ளச் சுவர்களில் ஒட்டிக் கிடப்பதுன் ஓவியம் சிந்தை முழுவதும் சிந்திக் கிடப்பதுன் காவியம் நீலக் கண்ணில் நித்தமும் நாளும் ஒரு சொப்பனம் நீயும் தந்த மாயம் என்னவோ

சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன

வட்டப் பந்து தொட்டு விளையாட வந்த வட்ட நிலா வண்ணச் சிந்து சொல்லி உறவாட வந்த சின்ன நிலா

பொட்டு வைத்துக் கொண்டதோ புன்னகைத்து நின்றதோ கிட்ட கிட்ட வந்ததோ கட்டி முத்தம் தந்ததோ தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ

சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம்

முத்த மழை விழ தத்தளிக்கும் தளிர்த் தேகமோ முன்னழகும் இந்தப் பின்னழகும் எனதாகுமோ கட்டழகன் விரல் பட்ட உடன் குளிர் போகுமோ கண்ணிரண்டில் கோடி மின்னல் எழ என்னவாகுமோ

சின்னக் குயில் இணை சந்திக்கையில் இசை பாடுமோ அந்தரத்தில் ஒரு மந்திரத்தில் மனம் ஆடுமோ நாணப்பட்ட நெஞ்சமோ நாலும் கெட்ட நேரமோ தோளைத் தொட்டு தாவிக் கொண்டதோ