Vazhvennum Sorgathil |
---|
வாழ்வென்னும் சொர்க்கத்தில்
உந்தன் பக்கத்தில்
நான் வரவேண்டும்
சுகம் பெற வேண்டும்
அந்த வரம் வேண்டும் ம்ம்ம்ம்
ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு
ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு
ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு
வாழ்வென்னும் சொர்க்கத்தில்
உந்தன் பக்கத்தில்
இவள் வரவேண்டும்
சுகம் பெற வேண்டும்
வரம் தர வேண்டும்
ம்ம்ம்ம்
இயற்கை அழகு
இளமை விருந்து
படைக்கும் வயதல்லவோ
இங்கு ரசிக்க தடை என்னவோ
இவள் உன்னை நினைத்து
தன்னை மறந்து
நெஞ்சில் வளர்ந்து
எண்ணம் தவித்து
எங்கோ பறக்கிறாள்
வயதில் அரும்பும்
வசந்த சுகங்கள் வாழ்வை வளர்கின்றது
நினைத்தால் யாவும் இனிக்கின்றது
விடைத்தேடி
பார்த்தாலும் கிடைக்காதது
இள நெஞ்சின் கணக்கு
நெஞ்சின் கணக்கு
என்றும் இனிக்குது
வாழ்வென்னும் சொர்க்கத்தில்
உந்தன் பக்கத்தில்
நான் வரவேண்டும்
சுகம் பெற வேண்டும்
அந்த வரம் வேண்டும்
பெண் மற்றும்
இதயம் எழுதும் கவிதை
முழுதும் காதல் கதைகளடி
இளமை மலர்கள் மலருமடி
இது மாலை மயக்கம்
காலை உறக்கம்
ஆளை மயக்கும் ஊரே
மயங்கும் வேளை பிறந்ததே
வாடை குளிரும்
வாடும் உடலும்
என்னை வாட்டுதடி
மன்னன் நினைவை ஊட்டுதடி
தடைப்போட
முடியாத கதைதானடி
இள நெஞ்சின் கணக்கு
நெஞ்சின் கணக்கு
என்றும் இனிக்குது
வாழ்வென்னும் சொர்க்கத்தில்
உந்தன் பக்கத்தில்
நான் வரவேண்டும்
சுகம் பெற வேண்டும்
அந்த வரம் வேண்டும் ம்ம்ம்
ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு
ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு
ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு