Vedikaiya Pozhuthu Poganum

Vedikaiya Pozhuthu Poganum Song Lyrics In English


ம்ஹ்ஹும்
ஏஹே ஹே

ஆஅஆஅஆஆஅஆ
ஓஹோ ஹோய்யா

வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்
ஆஹான்வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்

ஆடிப்பாடி அனுபவிக்கோணும்
அதில் அறிவைக் கொஞ்சம் தூங்க வைக்கோணும்
ஆடிப்பாடி அனுபவிக்கோணும்
அதில் அறிவைக் கொஞ்சம் தூங்க வைக்கோணும்

வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்

எல்லோரும் போகும் வழியில் நாமும் போகணும்
முன்னேறும் மட்டும் ஏணியில் ஏறிப் பார்க்கணும்

இருப்பதற்கு இடம் கிடைச்சா
படுத்துக் கொள்ளணும்
இதயத்திலே சுமை இருந்தா
இறக்கி வைக்கணும்


பொய் சொல்லுவதுதான் நீதியென்றால்
பொய்யும் சொல்லணும்
அது புரிந்து விட்டால் புன்னகையால்
மறைக்கப் பார்க்கணும்

பொய் சொல்லுவதுதான் நீதியென்றால்
பொய்யும் சொல்லணும்
அது புரிந்து விட்டால் புன்னகையால்
மறைக்கப் பார்க்கணும்

தன்னைப் பற்றிப்
பெருமையாகப் பேசிக் கொள்ளணும்

அதில் உண்மையென்று
ஒன்றிரண்டு சேர்ந்திருக்கணும்
அதில் உண்மையென்று
ஒன்றிரண்டு சேர்ந்திருக்கணும்

ஆஹா ஹா ஹான்

வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்