Veera Magan Poraada |
---|
வீர மகன் போராட
வெற்றி மகள் பூச்சூட
மானமொரு வாழ்வாக
வாழ்வு நதி தேனாக
முன்னேறுவோம் நம் நாட்டையே
முன்னேற்றுவோம்
வீர மகன் போராட
வெற்றி மகள் பூச்சூட
மானமொரு வாழ்வாக
வாழ்வு நதி தேனாக
முன்னேறுவோம் நம் நாட்டையே
முன்னேற்றுவோம்
இருவர் : முன்னேறுவோம் நம் நாட்டையே
முன்னேற்றுவோம்
நன்மை பூத்த கொடி மேலே
நாகம் உலவும் கதை போலே
நன்மை பூத்த கொடி மேலே
நாகம் உலவும் கதை போலே
தீய கைகள் ஒங்க
தேயும் மக்கள் ஏங்கும்
தீய கைகள் ஒங்க
தேயும் மக்கள் ஏங்கும்
நிலை மாறவே பழி யாவும் தீர
வேலேந்துவோம்
வீர மகன் போராட
வெற்றி மகள் பூச்சூட
மானமொரு வாழ்வாக
வாழ்வு நதி தேனாக
முன்னேறுவோம் நம் நாட்டையே
முன்னேற்றுவோம்
புள்ளி மான்கள் திண்டாட
வேங்கை புலிகள் கொண்டாட
புள்ளி மான்கள் திண்டாட
வேங்கை புலிகள் கொண்டாட
மாதர் உள்ளம் வாடும்
காலம் மாற வேண்டும்
மாதர் உள்ளம் வாடும்
காலம் மாற வேண்டும்
புவி மீதிலே பொது நீதி காண
போராடுவோம்
வீர மகன் போராட
வெற்றி மகள் பூச்சூட
மானமொரு வாழ்வாக
வாழ்வு நதி தேனாக
முன்னேறுவோம் நம் நாட்டையே
முன்னேற்றுவோம்
பண்பு வாழ கலை வாழ
பாரில் உழவுத் தொழில் வாழ
பண்பு வாழ கலை வாழ
பாரில் உழவுத் தொழில் வாழ
தெய்வம் நின்று வாழ்த்தும்
தியாகம் செய்ய வேண்டும்
தெய்வம் நின்று வாழ்த்தும்
தியாகம் செய்ய வேண்டும்
இருவர் : பகை நீங்கவே
களம் காண நாமும் வாளேந்துவோம்
வாளேந்துவோம்
வாளேந்துவோம்
இருவர் : வாளேந்துவோம்
வாளேந்துவோம்
இருவர் : வாளேந்துவோம்
அனைவரும் : வீர மகன் போராட
வெற்றி மகள் பூச்சூட
மானமொரு வாழ்வாக
வாழ்வு நதி தேனாக
முன்னேறுவோம் நம் நாட்டையே
முன்னேற்றுவோம்
முன்னேறுவோம்
முன்னேறுவோம்
முன்னேறுவோம்
முன்னேறுவோம்