Vella Kuthira Mela |
---|
வெள்ளக் குதிர மேல
வீச்சருவா கையில் ஏந்தி
அய்யனாரு வந்தாரய்யா
அகிலத்த ஆட்சி பண்ண
அகிலத்த ஆட்சி பண்ண
மன்னவனே உன் கையில
மரப்பாச்சி குதிர பொம்ம
நீ ஆட்சி செய்யும் காலம்
இன்னும் ரொம்ப தூரமில்ல
இன்னும் ரொம்ப தூரமில்ல
நாலு காலு புரவியடா
எட்டு தெச பறக்குமடா
நாடாண்ட மன்னருங்க
நம்பி நின்ன சக்தியடா
நம்பி நின்ன சக்தியடா
குலம் வழி சத்தமிட்டு
புயல் வேகம் இது பறக்கும்
போர் களத்தில் சீறி பாஞ்சி
போராடி வெற்றி தரும்
போராடி வெற்றி தரும்
கடிவாளம் நீ புடிச்சா
கையில் வானம் அடங்குமடா
பிடிவாதம் நீ புடிச்சு
பூமியில ஜெயிக்கணும்டா
போராடி ஜெயிக்கணும்டா