Vennilave Vennilave Tharaiyil Irangi |
---|
இசை அமைப்பாளர் : தினா
ஓஓஹ்ஹ்ஓஓஒஹ்ஓஓஒஹ்
வெண்ணிலவே வெண்ணிலவே
தரையில் இறங்கி வருகின்றதோ
என்னுயிரே மண்ணுலகில் எனது
இரண்டாம் தாயல்லவோ
சிறகடிக்கும் சிறு கிளியே
இந்த மனம் நந்தவனமல்லவோ
இறைவன் வகுத்த பந்தமல்லவோ
வெண்ணிலவே வெண்ணிலவே
தரையில் இறங்கி வருகின்றதோ
மான் வேண்டுமா
வெள்ளி மீன் வேண்டுமா
உனக்காக வலை விரிப்பேன்
ஓஹோஹோ
பல்லாங்குழி நீயும் விளையாடவே
வைரக்கல் வரவழைப்பேன்
சுகம் சுகம் தரும் என் சுகந்தமும் நீ
வசம் வசம் வரும் வரும் பொன் வசந்தமும் நீ
என் கண்மணிக்குள் உன்
உருவம் செதுக்கி வைப்பேன் ஓஓஹோ
வெண்ணிலவே வெண்ணிலவே
தரையில் இறங்கி வருகின்றதோ
கல்லாகவே நின்ற என் நெஞ்சிலே
பூ ஒன்று வேர் விட்டது ஓஓஹோ
தாயாகவே இன்று என் மார்பிலே
பாசத்தின் பாலூறுது
நிறம் நிறம் பெறும் பெரும்
என் நினைவுகளே
வரம் வரம் தரும் தரும் உன் கனவுகளே
என் உயிரையும் உயிலாக எழுதி வைப்பேன்
ஓஓஹ்ஹ்ஓஓஒஹ்ஓஓஒஹ்
வெண்ணிலவே வெண்ணிலவே
தரையில் இறங்கி வருகின்றதோ
என்னுயிரே மண்ணுலகில் எனது
இரண்டாம் தாயல்லவோ
சிறகடிக்கும் சிறு கிளியே
இந்த மனம் நந்தவனமல்லவோ
இறைவன் வகுத்த பந்தமல்லவோ