Vizhigal Moodikondaal |
---|
விழிகள் மூடிகொண்டால்
கனவு வந்து பூக்கும்
கனவு வந்து பூத்தால்
காதல் சேர்ந்து கொள்ளும்
காதல் சேர்ந்து கொண்டால்
கவிதை சிறகு விரிக்கும்
கவிதை சிறகு விரித்தால்
கானம் கோடி பிறக்கும்
கானம் கோடி பிறந்தால்
வானம் கீதம் இசைக்கும்
வானம் கீதம் இசைத்தால்
விண்ணில் மீன்கள் முளைக்கும்
விண்ணில் மீன்கள் முளைத்தால்
கண்ணில் மீன்கள் துள்ளும்
கண்ணில் மீன்கள் துள்ள
அடி விழிகள் மூடி கொள்ளும்
ஹோ
விழகள் மூடிக்கொண்டால்
கனவு வந்து பூக்கும்
கனவு வந்து பூத்தால்
காதல் சேர்ந்து கொள்ளும்
ஹோ
ஹோ
So many options and
I Chose to take emotion
You can give me vibe that is
More than a fusion
Thinking bout you got me
Go sensation
And i want what i want
When i am down on my girl
வான் நிலா பஞ்சனை ஆகுமே
மேகமே பூ மழை தூவுமே
தோரணம் விண்மீன் கட்டுமே
ஆயிரம் தேன் மலர் கொட்டுமே
விடிய விடிய விழிகள் நான்கும்
போதி மொழி பேசும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
முல்லை மல்லி ரோஜாக்கள்
கலந்து தென்றல் வீசும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
தேகம் ரெண்டு மூச்சு வாங்கி
மோக ராகம் பாடும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
பால்வெளியில் பருவ நதி
பெருக்கெடுத்து ஓடும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஹோ
விழிகள் மூடிகொண்டால்
கனவு வந்து பூக்கும்
கனவு வந்து பூத்தால்
காதல் சேர்ந்து கொள்ளும்
ஹோ
பார்வையில் மின்னலை தேக்கினாய்
பார்க்கையில் குளிர் மழை போக்கினாய்
கொஞ்சியே குழந்தை ஆக்கினாய்
கூந்தலில் ஊஞ்சல் ஆட்டினாய்
உச்சி தொற்று ஒற்றை விரல்
ஊர்ந்து ஊர்ந்து இறங்கும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
உதடு கழுத்து இதய சுவரில்
ஓவியங்கள் வரையும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
முத்து முத்தாய் தேகம் எங்கும்
வேர்வை பூக்கள் வெடிக்கும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
முத்தம் இட்டு மோக இதழ்கள்
தாகம் தீர்க்க குடிக்கும்
ஹோ ஓ ஹோ ஓ ஹோ
விழிகள் மூடிகொண்டால்
கனவு வந்து பூக்கும்
கனவு வந்து பூத்தால்
காதல் சேர்ந்து கொள்ளும்
காதல் சேர்ந்து கொண்டால்
கவிதை சிறகு விரிக்கும்
கவிதை சிறகு விரித்தால்
கானம் கோடி பிறக்கும்
கானம் கோடி பிறந்தால்
வானம் கீதம் இசைக்கும்
வானம் கீதம் இசைத்தால்
விண்ணில் மீன்கள் முளைக்கும்
விண்ணில் மீன்கள் முளைத்தால்
கண்ணில் மீன்கள் துள்ளும்
கண்ணில் மீன்கள் துள்ள
அடி விழிகள் மூடி கொள்ளும்
ஹோ