Vizhiyae Vizhiyae

Vizhiyae Vizhiyae Song Lyrics In English


விழியே விழியே
திரை விரிகிறதே உன்னை
பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம்
வரைகிறதே மனம் சேர்ந்திடும்
ஆசைகளே

கதிரவனாக திரிந்த
பகல் நிலவென தேயவும்
துணிந்ததடி கருநிறமாக
இருந்த நிழல் உனதொரு
பார்வையில் வெளுத்ததடி

அன்பே உன்னை
பார்ப்பதும் அனுபவமே
உன்னால் உயிர் போவதும்
சுகம் சுகமே

விழியே விழியே
திரை விரிகிறதே உன்னை
பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம்
வரைகிறதே மனம் சேர்ந்திடும்
ஆசைகளே

எதை நீ சொன்னாலும்
வியப்பேன் உன் அழகை கை
ஏந்தி ரசிப்பேன்

அடம் நீ செய்தாலும்
பொறுப்பேன் உன் குரலை
செல்போனில் பதித்தேன்
பொழுதும் உன்னோடு
இருப்பேன் உன் சிாிப்பில்
சோம்பல்கள் முறிப்பேன்


எதை நீ சொன்னாலும்
வியப்பேன் உன் அழகைக் கை
ஏந்தி ரசிப்பேன்

ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

இலையும் தீண்டாத
கனி நீ நான் சுவைக்கும் நாள்
கிட்டும் பொறு நீ விரல்கள்
மீட்டாத இசை நீ மெல்லிசையாய்
என் காதல் வசம் நீ

தவமே செய்யாத
வரம் நீ பெண் கடலே
முத்தங்கள் இடு நீ
இலையும் தீண்டாத கனி
நீ நான் சுவைக்கும் நாள்
கிட்டும் பொறு நீ