Yaaradicha Yaaradicha

Yaaradicha Yaaradicha Song Lyrics In English


யார் அடிச்சா யார் அடிச்சா
சொல்லிவிடு
மனம் வலிச்சா மனம் வலிச்சா
மாத்திவிடு

இரண்டு ஜீவன்
நடுவில் நடக்கும் வழக்கு
இதில் இருண்டு போச்சு
வெளிச்சம்மான கிழக்கு

இடம் மாற்றி நட்ட மரம்
தடுமாறி விழுதே
மனம் மாறி வாழ தினம்
வழி தேடி அழுதே

யார் அடிச்சா யார் அடிச்சா
சொல்லிவிடு
மனம் வலிச்சா மனம் வலிச்சா
மாத்திவிடு

தாழ்த்தப்பட்ட பேரு
இது பாவப்பட்ட ஊரு
பிடி சாம்பல் ஆனது
எந்த சாதி கூறு

ஆட்டமெல்லாம் ஆடி
அட ஆளவட்டம் பாடி
அரசாண்ட போதிலும்
ஆறடிதான் மீதி

சிவனோட சாதிகூட
கீழ் சாதிதான்
அவனோட ஆலயத்தில்
மேல் சாதி ஏன்

விண்ணும் மண்ணும் பொதுவிலே
மனுஷனுக்கு தெரியல
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ

யார் அடிச்சா யார் அடிச்சா
சொல்லிவிடு
மனம் வலிச்சா மனம் வலிச்சா
மாத்திவிடு


தத்து தந்த சொந்தம்
அட தத்தெடுத்த பந்தம்
இரண்டோடும் ஏங்குதே
தன்னந்தனி நெஞ்சம்

நட்பென்னும் வார்த்தை
அதில் விட்டு தந்த வாழ்க்கை
விதியோட பாதையில்
போகுதொரு யாக்க

உயிர் கூடு மாற சொன்னா
இது நியாயமா
பலி ஆடு ஆகா சொல்லும்
சமுதாயமா

வேரும் வேரும் சேர்ந்திருச்சு
விழுது தானே விட்டிருச்சு
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ

யார் அடிச்சா யார் அடிச்சா
சொல்லிவிடு
மனம் வலிச்சா மனம் வலிச்சா
மாத்திவிடு

இரண்டு ஜீவன் நடுவில் நடக்கும்
வழக்கு
இதில் இருண்டு போச்சு வெளிச்சம்மான
கிழக்கு

இடம் மாற்றி நட்ட மரம்
தடுமாறி விழுதே
மனம் மாறி வாழ தினம்
வழி தேடி அழுதே

யார் அடிச்சா யார் அடிச்சா
சொல்லிவிடு
மனம் வலிச்சா மனம் வலிச்சா
மாத்திவிடு