Yappavum Naanthaanda |
---|
எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா
எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம்
எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா
எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம்
முள்ளும் மலராகும் கல்லும் கனியாகும்
எல்லாம் நம்ம கைராசி தான்
எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா
எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம்
சின்னத் தம்பி உத்தம ராசா
தேவர் மகன் ஏழை ஜாதி
மணிக் குயில் பொன்னுமணி வேடன்
எஜமான் கட்டளை உள்ளே வெளியே
இதயம் சிங்கார வேலன்
யாருக்கு என்னென்ன தேவை
மனம் போல படம் இருக்கு
மறைவான எடம் இருக்கு
இது போல எங்கே உண்டு
வர வேணும் இங்கே இன்று
ஏராளம் கேஸட்டு
வாங்கிப் போ நீ கேட்டு
எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா
அண்ணே
எந்நாளும் சந்தோஷம்
ஆமாங்கண்ணே
எங்கேயும் சங்கீதம்
பாக்கியம் எங்கே பல நாள் ஆச்சே
உடம்பு துரும்பாகிப் போச்சே
இனியும் தாங்காது மூச்சே
பொறுத்தா நடக்கும்
ஒரு நாள் கிடைக்கும்
போட்டேன் சரியான பிளானு
மாட்டும் அதுவாக மானு
கடன் வாங்கி நாளாச்சுது
இப்ப மாசம் ஏழாச்சுது
என்னாச்சு நம்ம வட்டி
போடாதே நாமக் கட்டி
அடியாத்தி மெரட்டாதே
தருவேன் நான் வெரட்டாதே
எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா
எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம்
முள்ளும் மலராகும் கல்லும் கனியாகும்
எல்லாம் நம்ம கைராசிதான்
எப்பவும் நான் தான்டா இங்கொரு ராஜா
எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம்