Yei Oodu Oodu

Yei Oodu Oodu Song Lyrics In English


ஏய் ஓடு ஓடு தடை
எல்லாமே தங்கக்கட்டி
தான் தேடு தேடு நம்ம
வாழ்க்கையே வெற்றிபடி
தான்

ஆடி பாடு அந்த
மூங்கிலும் புல்லாங்குழல்
தான்

ஓடு நிக்காமலே
வாழும் வழி கோடி இருக்கு
இப்ப தேடி உனக்கு அது
கூடி இருக்கு

நானே ராஜா இனி
கேள்வி எதுக்கு புது
வாழ்க்கை இருக்கு இப்ப
வெற்றி மேல் வெற்றி
தான் டா

ஏய் ஓடு ஓடு தடை
எல்லாமே தங்கக்கட்டி தான்
தேடு தேடு நம்ம வாழ்க்கையே
வெற்றிபடி தான்

ஆடி பாடு அந்த
மூங்கிலும் புல்லாங்குழல்
தான் ஓடு நிக்காமலே ஹே

ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஹே நேற்று போல
இன்று இல்லை இன்று
போல நாளை இல்ல
நினைத்த
வேலைகள் நடக்குது
என்ன போல யாரும்
இல்லை தேடிப்பாரு ஊருக்குள்ள
வாழ்க்கை சக்கரம் மாறுது
வாழ்த்து சொல்லி தான் சுத்துது

அட மேகம் போனாலும்
அந்த வானம் மாறாதே என்
வாழ்க்கை மாறி போனால்
கூட உள்ளம் மாறாதே

என் காலம் வந்தாலும்
பல யோகம் வந்தாலும் அட
சுத்தும் பூமி போல நானும்
சுத்த போறேன் சுத்த
போறேன்

ஏய் ஓடு ஓடு தடை
எல்லாமே தங்கக்கட்டி
தான் தேடு தேடு நம்ம
வாழ்க்கையே வெற்றிபடி
தான்


ஆடி பாடு அந்த
மூங்கிலும் புல்லாங்குழல்
தான் ஓடு நிக்காமலே ஹே



காதல் வந்தால் கண்கள்
பேசும் பூக்கள் இங்கே காற்று
வீசும் துள்ளும் இளமை முத்தம்
கேட்கும் மூச்சு காற்றும்
உன்னை தேடும்

ஆசை வந்தால்
கைகள் தீண்டும் மௌனம்
கூட எல்லை தாண்டும்
பேசும் இதழ்கள் கவிதை
சொல்லும்

உயிரின் உயிரே
வா வா உறவும் நீ தானே
அழகின் அழகே வா வா
என் உலகம் நீ தானே

அன்பே இது
புத்தம் புதுசு நான் காதல்
பரிசு நம் வாழ்க்கை
பெருசு வா வா ராணி

இது காதல் கணக்கு
அது மிச்சம் இருக்கு நம்
பூமியே சொர்க்கம்
தான் மா

இது தானா நம்
காதலின் சொர்க்க பூமியா
நிஜம் தானா நம் காதலே
வாழும் சாட்சியா

இந்த காதல் நம்
வாழ்க்கையே மாற்றும்
வெற்றியா நான்
சொல்லாமலே

இசை பாடும் நம்
உள்ளத்தில் காதல் துள்ளுதே
திசை மாறும் மழை மேகங்கள்
பூக்கள் தூவுதே வழி காட்டும்
புது பாதையும் வாழ சொல்லுதே
ஏய் ஹே என் காதலே