Yen Aala Paaka Poren

Yen Aala Paaka Poren Song Lyrics In English


என் ஆள பாக்க
போறேன் பாத்து சேதி
பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள
என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள
என்ன தைக்க போறேன்
நானே என்ன தரபோறேன்

வீட்ட விட்டு வந்துட்டேனு
சொல்ல போறேன் கூட்டிக்கிட்டு
போயிடுனு சொல்ல போறேன்
இததான் எதிா்பாா்த்து நான்
கிடந்தேன் உயிா் வோ்த்து

என சொல்லி ஆசையில்
அல்லாடுவான் மனம் துள்ளி
காதலில் தள்ளாடுவான்
அத நான் பாத்தே அழபோறேன்

என் ஆள பாக்க
போறேன் பாத்து சேதி
பேச போறேன்



உன்னாலதான்
தூங்கலனு சொல்லப் போறேன்
சோறு தண்ணி சேரலன்னு
சொல்லப் போறேன் புதுசா புழுகாம
ரொம்ப பெருசா வழியாம

அடி எப்ப நீ எனக்கு
பொஞ்சாதியா ஆக போகுறனு
அப்பாவியா நானே கேட்டு
வரப்போறேன்

ஓ என் ஆள பாக்க
போறேன் பாத்து சேதி
பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள
என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள
என்ன தைக்க போறேன்
நானே என்ன தரபோறேன்