Yeruthe Sruthi Yeruthe

Yeruthe Sruthi Yeruthe Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

ஏறுதே ஸ்ருதி ஏறுதே
சுகம் மீறுதே உனக்கு
மாறுதே தடுமாறுதே
மனம் போடுதே கணக்கு
முன்னாலும் பின்னாலும் சங்கீதம்தான் அட
எப்போதும் சந்தோஷம்தான்
கல்யாணம் ஆகாத பொண்டாட்டிதான் அட
உன்னோட கண்ணாட்டிதான்

ஏறுதே ஸ்ருதி ஏறுதே
சுகம் மீறுதே உனக்கு
மாறுதே தடுமாறுதே
மனம் போடுதே கணக்கு

வாடாத வாழையில்ல
என் போல யாருமில்ல பாயப் போடவா
நான் ஆக்காத சோறுமில்ல
பாக்காத ஊருமில்ல நீயும் கூடவா

ஜோரான ஏலமல பூவான சோலமல
நேரில் பாக்கவா
தேரான தேகத்தில ஆறாத மோகத்தில
ஆடிப் பாக்கவா
எல்லாரும் புது மாப்பிள்ள நான்தானே இப்ப டாப்புல
எல்லாரும் புது மாப்பிள்ள நான்தானே இப்ப டாப்புல

ரோஜாப்பூ முள்ளத் தொட்டுப் பாத்தா
வலிக்காதோ
ராசாவே என்னத் கட்டிப் பாக்க புடிக்காதோ
நான் பாடும் ராகம் ஏறும் ஏறும் ஹேய்

ஏறுதே ஸ்ருதி ஏறுதே
சுகம் மீறுதே உனக்கு
மாறுதே தடுமாறுதே
மனம் போடுதே கணக்கு


தேசாதி தேசமுள்ள
ராசாதி ராசனுக்கும் ஆசை ஆனவ
நான் பேசாத பாஷ இல்ல
இங்கேதும் ஒசியில்ல ராசி ஆனவ

ஏறாத மேடையில்ல போடாத ஆடையில்ல
கோடி கோடிதான்
பாடாத ராகமில்ல போடாத தாளமில்ல
ஜோடியோடதான்

நான் போகும் பாத மாறல
வேறேதும் இப்ப தோணல
ராசாத்தி இஷ்டப்பட்டு கேட்டா தரவேணும்
ராவெல்லாம் கப்பம் கட்ட நீயும் வரவேணும்
நான் கூட தீரும் மோகம் தாகம் ஹேய்

ஏறுதே ஸ்ருதி ஏறுதே
சுகம் மீறுதே உனக்கு
மாறுதே தடுமாறுதே
மனம் போடுதே கணக்கு
முன்னாலும் பின்னாலும் சங்கீதம்தான் அட
எப்போதும் சந்தோஷம்தான்
கல்யாணம் ஆகாத பொண்டாட்டிதான் அட
உன்னோட கண்ணாட்டிதான்

ஏறுதே ஸ்ருதி ஏறுதே
சுகம் மீறுதே உனக்கு
மாறுதே தடுமாறுதே
மனம் போடுதே கணக்கு