Yezhai Jathi Kozhai Jathi Illai

Yezhai Jathi Kozhai Jathi Illai Song Lyrics In English


பாடலாசிரியர்  : வாலி

ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல

ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல

ஏ மானிடனே மானிடனே ஒன்று சேர்ந்து கூடு ஒரு போர் பரணி புதுப் பரணி புதிய கீதம் பாடு

ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல

வெள்ளையன் ஆள்கிற நேரத்திலும் அடிமைகளாய் இருந்தோம் விடுதலை வாங்கிய போதினிலும் விடியும் என்றே இருந்தோம்

ஆட்சியில் ஏறிய நம்மவர்கள் அவர் வழி பார்த்துக் கொண்டார் பெண் அவதியில் வாழ்கிற ஏழைகளோ அவர் முகம் பார்த்து நின்றார்

முதல்வர்கள் தான் இங்கு மாறுகிறார் முடிவுகள் மாறவில்லை ஆட்சிகள் தான் இங்கு மாறுதையா நம் அவதிகள் மாறவில்லை

முதல்வர்கள் தான் இங்கு மாறுகிறார் முடிவுகள் மாறவில்லை ஆட்சிகள் தான் இங்கு மாறுதையா நம் அவதிகள் மாறவில்லை

இனி பொறுத்திருந்தால் தடுப்பதற்கு உனக்கென யாரும் இல்லை இதை புரிந்து கொண்டால் தெரிந்து கொண்டால் வேறெதும் தேவை இல்லை

ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல


ஏ மானிடனே மானிடனே ஒன்று சேர்ந்து கூடு ஒரு போர் பரணி புதுப் பரணி புதிய கீதம் பாடு

ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல



ஜனத் தொகையில் நாம் வலுத்தவர்கள் பணத்தினில் இளைத்தவர்கள் மனத்தளவில் நாம் உயர்ந்தவர்கள் மனிதரில் சிறந்தவர்கள்

நிலங்களை நேசித்து கலம் விளைத்தோம் நமக்கென நிலங்கள் இல்லை வளங்களை பூமிக்கு வரவழைத்தோம் நமக்கொரு வளங்கள் இல்லை

வறுமைகள் பரம்பரை தலைவிதியா எழுதியதெவரும் இல்லை வழிகளை மாற்றிடத் தெரிந்து கொண்டால் எழுவதில் தவறும் இல்லை

வறுமைகள் பரம்பரை தலைவிதியா எழுதியதெவரும் இல்லை வழிகளை மாற்றிடத் தெரிந்து கொண்டால் எழுவதில் தவறும் இல்லை

நம் தவறுகளை திருத்திக் கொண்டால் தடைகளும் ஏதும் இல்லை நம் தலை எழுத்தை மாற்றிடுவோம் இதை விட நீதி இல்லை

ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல ஏ மானிடனே மானிடனே ஒன்று சேர்ந்து கூடு ஒரு போர் பரணி புதுப் பரணி புதிய கீதம் பாடு

ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல