Aanadhu Aachu Ponadhu

Aanadhu Aachu Ponadhu Song Lyrics In English


பாடகர்கள்  : ஜிக்கி மற்றும் எஸ் சி கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி

ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா

ஆறுதல் காண தேறுதல் சொல்லும் அன்புள்ளமே மறவாது இந்த நன்றியை என் உள்ளமே மறவாது இந்த நன்றியை என் உள்ளமே

வானம் பெய்யாமலே குடி வாழுமா பெண்ணின் வாழ்வும் அதுபோலத்தான் நீ கேளம்மா வானம் பெய்யாமலே குடி வாழுமா ஆணின் அன்பெனும் மழை இல்லாமலே பெண்கள் யாரும் இங்கு வாழ முடியாதம்மா

ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா


நானும் நன்றாய் அதை அறிவேனய்யா உங்கள் நாடகமும் என்னிடத்தில் பலிக்காதய்யா நானும் நன்றாய் அதை அறிவேனய்யா மானம் நிதானம் உள்ள பெண் நானய்யா ஏமாளி என்று என்னை எண்ண வேண்டாமய்யா

ஆறுதல் காண தேறுதல் சொல்லும் அன்புள்ளமே மறவாது இந்த நன்றியை என் உள்ளமே மறவாது இந்த நன்றியை என் உள்ளமே

பாராய் நீ அந்த பூஞ்சோலையை அதை பாதுகாக்க போட்டிருக்கும் புது வேலியை பாராய் நீ அந்த பூஞ்சோலையை சீராய் எந்நாளும் அது போல் வாழவே இங்கு தேவையம்மா பெண்ணுக்கு பொன் தாலியே

ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா இனி அல்லல் உந்தன் வாழ்விலே மிஞ்சாதம்மா

பாதை மாறாமலே நீ செல்லய்யா ஓரப் பார்வை பார்க்க நேரமிதா நீ சொல்லய்யா பாதை மாறாமலே நீ செல்லய்யா பாசம் உண்டாவது தன்னாலய்யா அதை பாட்டு பாடி கேட்டு வாங்க முடியாதய்யா

ஆறுதல் காண தேறுதல் சொல்லும் அன்புள்ளமே மறவாது இந்த நன்றியை என் உள்ளமே மறவாது இந்த நன்றியை என் உள்ளமே