Aanantha Dhaagam

Aanantha Dhaagam Song Lyrics In English


ஆனந்த தாகம்ம்ம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே நாணம் தோற்குமே அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே

ஆனந்த தாகம்ம்ம் என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ நாணம் தோற்குமோ அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ

உண்மையில் என் மயில் ஆடுமுன் ஆடுமுன் பொன் மழைக்காலம் போய்விடும் போகட்டும் ஆசை ஆறி விட நேர்ந்திடும் நேருமோ

ராத்திரி அலைகள் ஓயட்டும் ஓயுமோ மூத்தவர் தலைகள் சாயட்டும் சாயுமோ தீபத்தின் விழிகள் மூடட்டும் மூடுமோ

ஆடை கொடு ஆளை விடு தேகம் தொடு போதும் விடு தாகம் ஊறுதேஏ வளைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே

ஆனந்த தாகம்ம்ம்

கன்னியின் மேனி வேர்க்குதே ஏனம்மா ஜன்னலின் கம்பி பார்க்குதே அட ராமா பேசும் ஓசையொன்று கேட்குதே கேட்குமோ


திரிகளை விரல்கள் தூண்டுதே தூண்டாதே அணைகளை வெள்ளம் தாண்டுதே தாண்டாதே ஆசை நாகம் வந்து தீண்டுதே தீண்டாதேஏ

நாணம் வந்து ஊர்கின்றது தீயில் விஷம் சேர்கின்றது கண்கள் மூடுதே அணைக்கையில் கவிக்குயில் ஊமையானதே

ஆனந்த தாகம் லாலால லாலா உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே லாலால லாலா லாலலா நாணம் தோற்குமே லாலா லாலலா

அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே லாலா லாலலா நேரம் பார்க்குமே லாலாலாஆஆ நேரம் பார்க்குமே லாலா லாலலா நேரம் பார்க்குமே லாலா லாலலா