Aasai Aasai Aasai

Aasai Aasai Aasai Song Lyrics In English

ஆசை ஆசை ஆசை ஆசை

தூக்கம் விற்று தானே ஒரு கட்டில் வாங்க ஆசை தூண்டில் விற்று தானே அட மீன்கள் வாங்க ஆசை

நாக்கை விற்று தேனை வாங்கி நீரை விற்று தாகம் வாங்கி பூவை விற்று வாசம் வாங்கி தாயை விற்று பாசம் வாங்கி பூட்டை விற்று சாவி வாங்கும் பொல்லாத ஆசை ஆசை

ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை

தூக்கம் விற்று தானே ஒரு கட்டில் வாங்க ஆசை தூண்டில் விற்று தானே அட மீன்கள் வாங்க ஆசை

ஓஓஒ

நீரினில் வாழும் மீன்களின் கூட்டம் அதிசயம் ஏதும் இல்லை அந்த நீரினில் வேகும் மீன்களும் குழம்பாய் மாறிடும் மாற்றமில்லை

அளவுக்கு மீறி ஆசைகள் வந்தால் நிம்மதி சென்று விடும் வரவுக்கு மீறி செலவுகள் வந்தால் வழிகள் மாறிவிடும்

வெங்கடேசனே சீனிவாசனே மனம் போகுதே பணம் போட்ட பாதையில் தானே

ஆசை ஆசைஆசை ஆசை ஆசை ஆசைஆசை ஆசை

தூக்கம் விற்று தானே ஒரு கட்டில் வாங்க ஆசை தூண்டில் விற்று தானே அட மீன்கள் வாங்க ஆசை

ஓஓஒ

மனிதன் பசிக்கு கோழிகள் இரை தான் கோழிக்கு புழு இரை தான் புழுவின் பசிக்கு மண் இரை தான் மண்ணுக்கு மனிதன் தான்

மண்ணில் வந்தது மண்ணில் முடியும் மனதுக்கு தெரிவதில்லை உறவில் வந்தது விறகில் முடியும் உலகம் அறிவதில்லை

அலைபாயுதே நிறம் மாறுதே மனித வாழ்விலே ஆசையை ஆசை தின்று விடும்