Aavarampoo Azhage

Aavarampoo Azhage Song Lyrics In English


ஆவாரம் பூ அழகே ஆளான தேர் அழகே பூவாரம் போல் அழகே ஆதாரம் உன் அழகே

ஆவாரம் பூ அழகே ஆளான தேர் அழகே பூவாரம் போல் அழகே ஆதாரம் உன் அழகே ஒருநாளும் மச்சான் பேச்சு மாறாது ஓடை நீர் உப்புத் தண்ணி ஆகாது

இது எல்லாமே விளையாட்டு போனது போகட்டும் பூங்கொடி தலையாட்டு

ஆவாரம் பூ அழகே ஆளான தேர் அழகே பூவாரம் போல் அழகே ஆதாரம் உன் அழகே

ஆளான காலந்தொட்டு அழகான காலத் தொட்டு கண்ணுக்குள்ள ஒத்திக் கொள்ள காலம் வரலையா

மடிமேலே அள்ளி வச்சு மாராப்ப தள்ளி வச்சி நெத்திப் பொட்ட மாத்திக் கொள்ள நேரம் வரலையா

அடிக் கிளியேஓஓஓஓஓஓஓஓஹ் அடிக் கிளியே கிளி கடிக்கும் கனியே கனியிருக்கும் கொடியே நீ கிட்ட வாயேன்டி நான் ஓடம் நீ வந்தால் உசுருக்கு ஒலை வச்சு ஒரு கணம் சிரிக்கிறியே

ஆவாரம் பூ அழகே ஆளான தேர் அழகே பூவாரம் போல் அழகே ஆதாரம் உன் அழகே




மச்சான் உன் பேரச் சொல்லி மருதாணி போட்டுக்கிட்டா வெக்கத்துல இன்னும் கொஞ்சம் செவக்குதய்யா

நானிருக்கும் நெஞ்சுக்குள்ளே வேறொருத்தி எட்டி பாத்தா கன்னிப் பொண்ணு நெஞ்சு கொஞ்சம் துடிக்குதய்யா

உன்ன நெனச்சுஆஆஆஆஆஆஹ் உன்ன நெனச்சு நான் ரெண்டு கண்ணும் முழிச்சு உன்னக் கண்டு மனம் தவிச்சு நான் பூத்துக் கிடக்கேன் நீ பாராம போனாலும் பூசணி பூவா வாசலில் நானிருப்பேன்

ஆவாரம் பூ அழகு ஆளான தேர் அழகு பூவாரம் போல் அழகு ஆதாரம் என் அழகு ஒருநாளும் கன்னி பேச்சு மாறாது ஓடை நீர் உப்புத் தண்ணி ஆகாது

நான் மாராப்பு போட்டாலும் மனசுக்குள் இருப்பதை மறைக்கவும் முடியலையே

ஆவாரம் பூ அழகு ஆளான தேர் அழகு பூவாரம் போல் அழகு ஆதாரம் என் அழகு