Ada Nichayatharththam

Ada Nichayatharththam Song Lyrics In English


தந்தன நன தன தந்தனனா தன தந்தன தந்தான நன தன தந்தனனா

அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி அது நடக்கும் முன்னாலே யாருக்கு யாரு காமி அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி அது நடக்கும் முன்னாலே யாருக்கு யாரு காமி

பொண்ணு கழுத்துல தாலி விழுகிற வரைக்கும் நிச்சயமாகாது தலை எழுத்துல சாமி எழுதியத இங்கு அழிச்சவன் கெடையாது

அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி

தகப்பன் கிழித்தான் ஒரு கோடு தாய் படும்பாடு பெரும்பாடு மகளே உனக்கோர் மறு வீடு வகுப்பான் இறைவன் எதிர் பாரு விடிந்திடும் இரவு வெளுத்திடும் கிழக்கு பொறுத்திரு மகளே புலம்புதல் எதற்கு

நாடக மேடை வாழ்க்கையிலே நாளைய காட்சியை யார் அறிவார் எதுவும் நடக்கலாம் தடையை கடக்கலாம் விதைகள் முளைத்து வரலாம்

அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி


சிறையில் இருக்கும் கிளி கூட சிறகை விரிக்கும் பறந்தோட இறைவன் நினைத்தால் நடக்காதோ திறவா கதவும் திறக்காதோ வேளைகள் வரலாம் விடுதலை கிடைக்க நாயகன் தீர்ப்பை எவன் வந்து தடுக்க

ஆண்டவன் காட்டும் வேடிக்கைதான் அவனுக்கு அதுவே வாடிக்கைத்தான் இலைகள் உதிரலாம் கிளைகள் வருந்தலாம் வசந்தம் திரும்ப வரலாம்

அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி அது நடக்கும் முன்னாலே யாருக்கு யாரு காமி

பொண்ணு கழுத்துல தாலி விழுகிற வரைக்கும் நிச்சயமாகாது தலை எழுத்துல சாமி எழுதியத இங்கு அழிச்சவன் கெடையாது

அட நிச்சயதார்த்தம் மேலே நடக்குது சாமி