Adi Meera Podu Jaldra

Adi Meera Podu Jaldra Song Lyrics In English


அடி மீரா போடு ஜால்ரா பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா அடி மீரா போடு ஜால்ரா பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா

அடி ரேகா படு நேக்கா நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா அடி ரேகா படு நேக்கா நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா

அன்னலட்சுமி சொர்ணலட்சுமி எங்க வீட்டு மஹாலட்சுமி வாழ்க

அடி மீரா போடு ஜால்ரா பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா அடி ரேகா படு நேக்கா நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா

ஓயாமல் சூட்டிங் நீ வந்தாயே மீட்டிங் உன்னை வாயார வரவேற்கிறோம் ஓயாமல் சூட்டிங் நீ வந்தாயே மீட்டிங் உன்னை வாயார வரவேற்கிறோம்

உன்னை போல அன்னை இல்லை நாங்களெல்லாம் கவிஞன் இல்லை

யார் யாரோ கேட்டு நீ தந்தாயே நோட்டு இங்கேயும் கொஞ்சம் உன் தாராளம் காட்டு நீ தாகம் தீர்க்கும் மேகம்தான்

அன்னலட்சுமி சொர்ணலட்சுமி எங்க வீட்டு மஹாலட்சுமி வாழ்க

அடி மீரா போடு ஜால்ரா பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா அடி ரேகா படு நேக்கா நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா

நாடெல்லாம் பேரு அட நம்பர் ஒன் ஸ்டாரு அந்த பந்தாக்கள் கிடையாதம்மா பிள்ளை உள்ளம் வெள்ளை உள்ளம் பொங்குகின்ற அன்பு வெள்ளம்


ராஜாத்தி தோட்டம் அதில் ரசிகர்கள் கூட்டம் கூஜாக்கள் இல்லை ஒரு கூர்க்காவும் இல்லை வெளி வேஷம் ஜம்பம் அங்கில்லை

அன்னலட்சுமி சொர்ணலட்சுமி எங்க வீட்டு மஹாலட்சுமி வாழ்க

அடி மீரா போடு ஜால்ரா பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா அடி ரேகா படு நேக்கா நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா

கேட்டுப்பார் சும்மா கொடைவள்ளல்தான் அம்மா அள்ளிக் கொடுக்காத நாளில்லையே கேட்டுப்பார் சும்மா கொடைவள்ளல்தான் அம்மா அள்ளிக் கொடுக்காத நாளில்லையே

தந்து தந்து கை சிவந்த தாய்க்குலம் நீ வாழ்க வாழ்க

காலேஜின் யோகம் உன் கால் பட்ட நேரம் காலங்கள் தோறும் பட்டக் கடனெல்லாம் தீரும் கண்கண்ட தெய்வம் நீயம்மா

அடி மீரா போடு ஜால்ரா பின் பாட்டுக்கள் பாடடி ஜோரா அடி ரேகா படு நேக்கா நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா

அன்னலட்சுமி சொர்ணலட்சுமி எங்க வீட்டு மஹாலட்சுமி வாழ்க